twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    8 வருஷமா அம்மா, அப்பாவை பாக்கல… கண்கலங்கிய ஐக்கி பெர்ரி!

    |

    சென்னை : பிக் பாஸ் சீசன் 5 இன்றைய எபிசோடில் ஐக்கி பெர்ரி, நான் செய்த சிறு தவறால் 8 வருஷமா அம்மா, அப்பாவை பார்க்கல என்று கண்ணீருடன் கூறினார்.

    Recommended Video

    Bigg Boss Season 05 Day-05 Review | Filmibeat Tamil

    விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் இந்த வாரம் கலகலப்பாகவும், உணர்ச்சிப் பூர்வமாகவும் நகர்ந்து வருகிறது. நிகழ்ச்சி ஆரம்பித்த ஐந்து நாட்கள் கடந்த நிலையில் இன்றைய எபிசோடு சண்டையுடமே ஆரம்பமானது.

    ஆரம்பத்தில் சிரித்து சிரித்து பேசிக்கொண்டு இருந்த நமீதா, தாமரைச்செல்வி இடையே திடீரென சண்டை ஆரம்பமானது.

    பிக் பாஸ் வீட்டில் சண்டை ஆரம்பம்.. ப்ளீஸ் வேண்டாம்… என்னால முடியல என்ற நமீதா!பிக் பாஸ் வீட்டில் சண்டை ஆரம்பம்.. ப்ளீஸ் வேண்டாம்… என்னால முடியல என்ற நமீதா!

    கத சொல்லட்டுமா

    கத சொல்லட்டுமா

    பிக் பாஸ் வீட்டில் நான் "ஒரு கத சொல்லட்டுமா?" டாஸ்கில் போட்டியாளர் நாங்கள் கடந்து வந்த பாதை குறித்து கூறிவருகின்றனர். இதில், கதை சொல்லும் விதம், கதையின் தன்மைகுறித்து லைக் மற்றும் டிஸ்லைக் கொடுக்கப்படுகிறது.

    ஐக்கி பெர்ரி

    ஐக்கி பெர்ரி

    இதையடுத்து, கடந்த 3 நாட்களாக போட்டியாளர்கள் தங்கள் கதைகளை கூறி வருகின்றன. இதில் தஞ்சாவூர் பொண்ணு ஐக்கி பெர்ரி நின்பாதை முற்கனல் என்று அழகான தமிழில் பேச ஆரம்பித்தார். எல்லாரும் கஷ்டப்பட்டுத்தான் ஒரு வெற்றியை பெற்று இருப்போம். ஆனால் என் வாழ்க்கையில் எல்லாமே இருந்து ஒரு க்யூன் மாதிரி இருந்து இன்று யாரும் இல்லாமல் இருக்கிறேன் என்றார்.

    8 வருஷமா அம்மா பாக்கல

    8 வருஷமா அம்மா பாக்கல

    ஒருவருடன் எனக்கு இருந்த ரிலேஷன் ஷிப்பால என் குடும்பம் என்னை அப்படியே விட்டு விட்டாங்க. நான் சென்னை வந்து 8 வருஷம் ஆச்சு இப்ப வரைக்கும் என் அம்மா அப்பாவை நான் பாக்கல.கொரோனா நேரத்துல நான் பேஷன்சை பார்த்தேன், தினமும் ஹாஸ்பிடல் போனேன் எல்லாரும் கால்பண்ணி என்னை பத்திரமா இருக்க சொன்னாங்க ஆனால் எங்க வீட்டுல இருந்து ஒரு போன் கூட வரல என்றார்.

    நான் ஒரு தமிழச்சி

    நான் ஒரு தமிழச்சி

    நான் ஒரு தமிழன்... நான் ஒரு தமிழச்சி என்பதால் பல இடத்தில் நான் மறுக்கப்பட்டேன். அதுவும் ராப் பாடகியா ஒரு பெண்ணா நான் நிறைய பிரச்சினைகளை சந்தித்து இருக்கிறேன். வெளிநாட்டு பெண் என்றால் நிறைய நிகழ்ச்சிக்கு கூப்பிடுறாங்க, ஆனால் நான் தமிழ்னு தெரிஞ்சதும் தமிழா லோக்கல்னு சொல்றாங்க. தமிழ்மொழிதான் உலகத்தில் தோன்றிய மூத்தமொழி. மொழியை பார்த்து ஒதுக்காதீங்க அவங்களின் திறமையை பாருங்க என்றார்

    பறக்க நினைக்கிறோம்

    பறக்க நினைக்கிறோம்

    நாங்கள் பறக்க நினைக்கிறோம்.. பறக்க விடவேண்டாம் தயவு செய்து அந்த இறகை உடைக்காதீர்கள் என்று அழகான தமிழில் பேசி முடித்தார். ஐக்கியின் பேச்சு நிச்சயமாக சாதிக்க துடிக்கும் பெண்களுக்கு ஒரு தூண்டு கோளாக இருக்கும்.

    English summary
    Tamil rapper Iykki berry sharing story of her struggle
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X