பிக் பாஸ் வீட்டில் சண்டை ஆரம்பம்.. ப்ளீஸ் வேண்டாம்… என்னால முடியல என்ற நமீதா!
சென்னை : நமீதாவுக்கும் தாமரைச்செல்விக்கும் இடையே நடந்த சண்டையை சமாதானப்படுத்த இமான் அண்ணாச்சி முயற்சி செய்கிறார்.
ஆனால் நமீதா அதற்கு இடம் தராமல் அப்படியே கட்டுக்கொள்ளாமல் சென்றுவிடுகிறார்.
என்னடா 5 நாள் ஆச்சே வீட்டில் சண்டையை காணுமே என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு இன்றைய எபிசோடு சுவாரசியமாக இருந்தது.

பிக் பாஸ் சீசன் 5
விஜய் டிவி-யில் பிரபலமான பிக் பாஸ் நிகழ்ச்சி சீசன் 5 கடந்த ஞாயிற்றுக் கிழமை தொடங்கியது. இந்த சீசனில் இசைவாணி, ராஜு ஜெயமோகன், மதுமிதா, அபிஷேக் ராஜா, நமீதா மாரிமுத்து, பிரியங்கா, அபினய் வாடி, சின்ன பொண்ணு, பாவனி, நதியா சங், வருண், இமான் அண்ணாச்சி, ஐக்கி பெர்ரி, ஸ்ருதி, அக்ஷரா, தாமரை செல்வி, சிபி சந்திரன், நிரூப் நந்தகுமார் ஆகிய 18 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர்.

தாமரைச்செல்வி ரேப் வாக்
5 நாள் எபிசோடில் இரவு அபிஷேக், பிரியங்கா மற்றும் தாமரைச்செல்வி, நிரூப் அனைவரும் பேசி சிரிந்து விளையாடிக்கொண்டு இருந்தார்கள் அப்போது, தாமரைச்செல்வி ரேப் வாக் நடந்து அனைவர் இடத்திலும் கைத்தட்டலை பெற்றார். இதையடுத்து, நமீதாவை பார்த்து தாமரைச் செல்வி, நீங்க மூடா பாப்பிங்களே எங்க பாருங்க என்று கேட்கிறார்.

மன்னிப்பு கேட்ட தாமரை
அனைவரையும் மயக்குறமாதிரி பாப்பல அதை எனக்கு சொல்லித்தா என்று தாமரைச்செல்வி என்னை பார்த்து கேட்குறாங்க என்று கோவத்துடன் பிரியங்காவிடம் கூறுகிறார். இதையடுத்து, தாமரை பல முறை மன்னிப்பு கேட்டும் ஏற்றுக்கொள்ளாத நமீதா. எனக்கா எப்போ தோணுதோ அப்போ பேசுறேன் என்றார்.

ப்ளீஸ் வேண்டாம்
இரவில் நடந்த சண்டை குறித்து மறுநாள் இமானிடம் நான் நேற்று 40 இல்ல 400 குழந்தைகளை கூட வளர்ப்பீர்கள் என்று நமீதாவிடம் கூறிறேன் என்றார். ஆனால் நான் பேசியதை அவங்க தப்பா நினைச்சிட்டாங்க என்றார். உடனே இமான் அண்ணாச்சி நான் சமாதானப்படுத்தவா என்கிறார். அதற்கு தாமரைச்செல்வி நான் உடனே மன்னிப்பு கேட்டுவிட்டேன் என்கிறார்.

ப்ளீஸ் வேண்டாம்
இதையடுத்து, நமீதாவை அழைத்து உக்கார சொல்கிறார் இமான். ஆனால், நமீதாவோ பெரியப்பா ப்ளீஸ் தப்பா எடுத்துக்காதீங்க, என்னால பேச முடியல வேண்டாம் என்கிறார்.தாமரை மீது இன்னும் அதே கோபத்துடன் நமீதா இருக்கிறார். சின்னதா ஆரம்பித்துள்ள பிரச்சினை பின்னாளில் எப்படி வெடிக்குமோ தெரியவில்லை.


Click it and Unblock the Notifications











