சம்திங் ராங்… நமீதா திடீரென வெளியேற என்ன காரணம்… தாறுமாறாக கேள்வி கேட்கும் நெட்டிசன்ஸ் !

சென்னை : நமீதா மாரிமுத்து திடீரென பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறியதற்கு என்ன காரணம் என நெட்டிசன்கள் கேட்டு வருகின்றனர்.

Recommended Video

Namitha Marimuthu BIGG BOSS விட்டு வெளியான அதிர்ச்சி காரணம்

அக்டோபர் 3ந் தேதி தொடங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒரு வாரமாக போட்டியாளர்கள் தங்கள் வாழ்க்கையில் கடந்து வந்த பாதை குறித்து பேசி வருகின்றனர்.

திங்கள் முதல் வெள்ளிவரை இரவு 10மணிக்கு ஒளிபரப்பாகும் இந்த ரியாலிட்டி ஷோவில், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை 9.30 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது. இதில், நேற்றைய எபிசோடில் கமல்ஹாசன் கலந்து கொண்டு போட்டியாளர்களுடன் பேசினார். அப்போது இந்த வீட்டிலிருந்து நமீதா வெளியேறியது மிகுந்த ஏமாற்றம் அளிப்பதாக கூறினார்.

கேள்விகளை கேட்பேன்

கேள்விகளை கேட்பேன்

கடந்து வந்த பாதையில் நமீதா திருநங்கையாக இருந்து வாழ்க்கையில் சந்தித்த பல இன்னல்களை கூறினார். பெத்தவங்க தப்பு இல்ல...மத்தவங்க தப்பு இல்லை என்று கதறி அழுது கொண்டு அவர் பாடியது கல்நெஞ்சையும் அசைத்துப் பார்த்தது. திருநங்கைனா கேவலமா பாக்குறாங்க, இருக்க வீடு தருவது இல்லை, படிக்க விடுவது இல்லை , ஏன் இப்படி இன்னும் நிறைய கேள்வி இருக்கு இந்த வீட்டில் இருக்கும் 100 நாளில் நான் பல கேள்விகளை கேட்பேன் என்றார்.

சாமாதானம்

சாமாதானம்

தாமரைச்செல்வி அவர் ஊர் பாஷையில் மயக்குறமாதிரி என்ற வார்த்தையை நமீதாவிடம் பயன்படுத்தினார். இதனால் திடீரென தாமரையிடம் பாய்ந்துவிட்டார் நமீதா . வாஷ் ரூமில் தாமரையிடம் 40 குழந்தைகள் என்ன 400 குழந்தைகளை கூட நீ வளர்ப்பே என நீ சொன்னே, நான் விட மாட்டேன், நான் விட மாட்டேன் என்றார் நமீதா. இதையடுத்து தாமரைச்செல்வி அவரிடம் மன்னிப்பு கேட்டுவிட்டாலும்,கோபத்துடன் இருந்தார் நமீதா. திடீரென,இரவில் தாமரையை எழுப்பி உங்களை மன்னிச்சிட்டேன் என்று அவருக்கு டீ போட்டு கொடுத்து சமாதானம் ஆனார்.

நமீதா வெளியேறினார்

நமீதா வெளியேறினார்

இதையடுத்து, நமீதா மாரிமுத்து சில தவிர்க்க முடியாத காரணங்களால் பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறினார் என பிக் பாஸ் அறிவித்தார். இதையடுத்து வந்த கமல் , நமீதாவின் கதை என்னை மிகவும் காயப்படுத்தியது என்றார். நமீதா வெளியேறியது மிகவும் வருத்தம் அளிப்பதாக கூறினார். நமீதா வெளியேறிய தகவலை அடுத்து இணையத்தில் நெட்டிசன்கள் காரணத்தை கேட்டு வருகின்றனர்.

சம்திங் ராங்

சம்திங் ராங்

பிக் பாஸின் தீவிரரசிகர், காரணம் இல்லாமல் எப்படி வெளியில் போக போறாங்க? சம்திங் ஏதோ நடந்து இருக்கு என்று கூறியுள்ளார்.

உடல்நலக்குறைவா?

உடல்நலக்குறைவா?

அதே போல மற்றொரு நெட்டிசன், உடல்நலக் குறைவு எதனால்? கடந்த episode-ல் தானே தாமரைச்செல்விக்கு டீ போட்டுக் கொடுத்தது. என்ன காரணம் என்று கேட்டுள்ளார்.

நிறைய மாற்றம்

நிறைய மாற்றம்

அவங்களுக்கு நிறைவே வேலை இருக்கலாம், அவர் திருநங்கைகள் பற்றி பேசுவதன் மூலம் நிறைய மாற்றத்தை கொண்டு வந்து இருப்பார் என்று கூறியுள்ளார்.

இப்படி நடிந்து இருக்குமோ

இப்படி நடிந்து இருக்குமோ

மற்றொரு பிக் பாஸ் ரசிகர் தாமரைச்செல்விக்கும் நமீதாவுக்கு சண்டை நடந்து இருக்கலாம். இதில் தாமரைச்செல்வி அவரின் பாலினம் குறித்து கெட்ட வார்த்தைகளை பயன்படுத்தி பேசி இருக்கலாம் இதனால் தான் நமீதா வெளியில் சென்று இருப்பார் என்று பலரும் பல காரணங்களை தெரிவித்து வருகின்றனர். சில தவிர்க்க முடியாத காரணம் என்பதற்கு பதிலாக என்ன காரணம் என்பதை ஒரு வரியிலாவது கூறி இருக்கலாம் என்று நெட்டிசன்கள் கருத்துக்களை கூறிவருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X