twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சின்ன பொண்ணுக்கு அட்வைஸ்… டிஸ்லைக் போட்ட ராஜூ… ஆரம்பிங்கப்பா உங்க வேலைய!

    |

    சென்னை : பிக் பாஸ் இல்லத்தில் லைட்டா சண்டையை மூட்டிவிடுற மாதிரி ராஜூ பேசி உள்ளார்.

    பிக் பாஸ் இல்லத்தில் 2வது நாள் வலிமை படத்தில் வரும், வேற மாதிரி பாட்டுடன் ஆரம்பமானது. அப்போது இமான் அண்ணாச்சி சரியான பாட்டு போட்டு இருக்கீங்க பிக்பாஸ். இங்க இருக்குறவங்க எல்லாம் வேறமாதிரி பல் விளக்காமல் இருக்குறாங்க என்று கலகலப்பாக கூறினார்.

    பிக் பாஸ் இல்லத்தில் இருப்பவர்கள் தாங்கள் கடந்து வந்த பாதை குறித்து ஹவுஸ்மெட்டுகளுக்கும், மக்களுக்கும் சொல்லவேண்டும் என்று டாஸ் கொடுக்கப்பட்டது.

    அய்யோ அந்த வீடா.. தெறித்து ஓடிய நடிகர்கள்.. கலந்து கொண்ட பாதி பேர் பாஸ் நடிகரோட சிபாரிசாம்!அய்யோ அந்த வீடா.. தெறித்து ஓடிய நடிகர்கள்.. கலந்து கொண்ட பாதி பேர் பாஸ் நடிகரோட சிபாரிசாம்!

    ஒரு கதை சொல்லட்டுமா.

    ஒரு கதை சொல்லட்டுமா.

    இதைடுத்து சிபியை அழைத்த பிக் பாஸ் ஒரு கடிதத்தை மற்ற ஹவுஸ்மெட்டுகளுக்கு படித்து காட்டும்படி கூறினார். இதில் இந்தவார லக்சரி பட்ஜெட் டாஸ்கில் இந்த வீட்டில் இருப்பவர்களின் கதை என்ன என்பதை ஹவுஸ்மெட்டுகளுக்கும், மக்களுக்கும் நீங்கள் யார் என்று புரியவைக்க வேண்டும். டாஸ் நேம் ஒரு கதை சொல்லட்டுமா..

    எமோஜிகள்

    எமோஜிகள்

    ஹவுஸ்மெட்டுகள் கதை சொல்லும் போது, கதை சொல்லி விதத்திற்கு ஏற்ப உங்களுக்கு கதை பிடித்து இருந்தால் லைக், டிஸ் லைக் மற்றும் ஹார்ட் எமோஜிகளை நீங்கள் அந்த பலகையில் ஒட்டலாம் என்று படித்துக்காட்டினார் சிபி.

    முதலில் இசைவாணி

    முதலில் இசைவாணி

    இதையடுத்து முதல் நபராக இசைவாணி தான் கடந்து வந்த பாதை குறித்து கண்ணீர் விட்டு அழுதபடி பேசினார். போடுவதற்கு மாற்று உடை கூட இல்லாமல் இருந்ததாக கூறி அனைவரையும் கண்கலங்க வைத்தார்.

    சின்னப்பொண்ணு

    சின்னப்பொண்ணு

    இதையடுத்து பேசிய நாட்டுப்புற பாடகி சின்னப்பொண்ணு, நான் மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தேன். எங்க வீட்டுல அரிசி சாதமே கிடையாது எப்போது கூழ்தான். இந்த நாட்டுப்புற பாட்டுத்தான் எனக்கு உயிர், அதுதான் என்னை வாழவச்சது என்று மிகவும் அழகாக சுருக்கமாக கூறினார்.

    டிஸ் லைக் போட்ட ராஜு

    டிஸ் லைக் போட்ட ராஜு

    சின்னப்பொண்ணு கூறிய கதை குறித்து பேசிய ராஜு கதை சொல்லும் விதம் எப்படி இருக்கு, கதை நல்லா இருந்துச்சா அதை வச்சு லைக், டிஸ் கொடுக்க சொன்னாங்க. நான் இந்த இடத்தில் ஒரு விஷயத்தை சொல்ல விரும்புறேன். கலைஞர்கள் எப்போதும் எவ்வளவு கஷ்டம் இருந்தாலும் அதை வெளியில் காமிக்கக்கூடாது என்று கூறினார். மேலும், அனைவரும் கைதட்டி நல்லா இருக்கு நல்லா இருக்குனு சொன்னா நாம வளரமுடியாது, நாம் முட்டி மோத ஒரு சுவர் வேண்டும் அந்த சுவரா நான் இருக்கிறேன் என்று கூறி சின்னபொண்ணுக்கு டிஸ்லைக் கொடுத்தார். இதனால் சின்னப்பொண்ணுவின் முகம் மாறினாலும் அதை வெளியில் காட்டிக்கொள்ளாமல் சரி சரி என்று தலையை ஆட்டினார்.

    English summary
    Raju did not like Chinna Ponnu story. so he gives dislike emoji
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X