“விரைவில் எங்களின் திருமணம்“.. காதலர் தினத்தில் குட் நியூஸ் சொன்ன சூப்பர் ஜோடி!
சென்னை : சின்னத்திரையில் அனைவரின் பேவரைட் ஜோடியான பாவ்னி மற்றும் அமீர் காதலர் தினமான இன்று தங்கள் திருமணம் குறித்து தெரிவித்துள்ளனர்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ரெட்டை வால் குருவி, தவணை முறை வாழ்க்கை போன்ற பல சீரியல்களில் நடித்து பிரபலமானவர் நடிகை பாவனி.
இதைத்தொடர்ந்து, சின்ன தம்பி என்ற சீரியலில் நடித்து இல்லத்தரசிகளுக்கு பிடித்தமான நடிகையான இவர் அந்த சீரியலில் இருந்து திடீரென வெளியேறினார்.

பாவ்னி மற்றும் அமீர்
கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்ட பாவனி, நிகழ்ச்சிக்கு வந்ததுமே, ஏகத்திற்கும் பிரபலமாகி விட்டார். பிக் பாஸ் வீட்டில் அபிநய் மற்றும் பாவனி இருவரும் காதலிப்பதாக பெரும் சர்ச்சை கிளம்பியது. அதன் பின் வைல்டு கார்டு என்ட்ரியாக நுழைந்த அமீர், பாவனியை காதலிப்பதாக கூறி அவர் பின்னால் சுற்றினார்.

பிபி ஜோடிகள் நிகழ்ச்சியில்
பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் ராஜூ டைட்டிலை வென்றார். பிரியங்கா இரண்டாவது இடத்தையும், பாவனி மூன்றாவது இடத்தையும், நான்காம் இடத்தை அமீர் பிடித்து இருந்தார்கள். பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பாவனி மற்றும் அமீருக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளமே இருந்தால், இவர்கள் இருவரும், பிபி ஜோடிகள் 2 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு டைட்டிலை வென்றனர்.

துணிவு படத்தில்
பிபி ஜோடிகள் நிகழ்ச்சியில் பல முறை காதலை சொன்ன போதும் ஏற்றுக்கொள்ளாத பாவனி ஒரு கட்டத்தில், ஐ லவ் யூ சொல்லி அமீரின் காதலை எற்றுக்கொண்டார். தற்போது, அனைவருக்கும் பிடித்த ஜோடியாக இவர்கள் இருவரும் வலம் வந்து கொண்டு இருக்கிறார்கள். சமீபத்தில் அஜித் நடிப்பில் வெளியான துணிவு படத்திலும் இவர்கள் இருவரும் ஜோடியாக நடித்திருந்தார்கள்.

விரைவில் திருமணம்
இந்நிலையில், இந்த க்யூட் ஜோடி ஆங்கில பத்திரிக்கை ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளனர். அதில், நான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் நுழைந்ததுமே அவரின் அன்பு, பாசத்தைப் பார்த்து காதலிக்கத் தொடங்கி விட்டேன். நாங்கள் 'நிச்சயம் திருமணம் செய்து கொள்வோம், ஆனால் அதற்கு இன்னும் ஒரு வருடமாவது ஆகும் என்று கூறியுள்ளனர். அதுமட்டுமில்லாமல் பாவனி தனது இன்ஸ்டாவில், காதலர் தினத்திற்கு அழகான காதல் பாடலுடன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











