அப்போ அது உண்மைதானா… ஆண்டவரே சொல்லிட்டாரா… இன்றைய முதல் ப்ரோமோ !
சென்னை : பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான முதல் ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதில் இரண்டு விரல்களை காட்டி எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்று கமல் கூறுகிறார்.
Recommended Video
தற்போது வெளியாகி உள்ள ப்ரோமோவால் ரசிகர்கள் குழம்பிப்போய் உள்ளனர் சில விவரமான ரசிகர்கள் இரண்டு பேர் வெளியில போறாங்க என்று சரியாக கணித்துள்ளனர்.
அது யாராக இருக்கும் என்று ரசிகர்கள் ஆர்வத்துடன் இன்றைய எபிசோடை எதிர்பார்த்து இருக்கின்றனர்.

கடுமையான டாஸ்க்
பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி கிட்டத்தட்ட இறுதிகட்டத்தை எட்டி உள்ளது. இதனால் , இனி வரும் நாட்களில் போட்டிகளும் சற்று கடினமாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த வாரம் தலைவர் பதவிக்கு நடந்த டாஸ்க் மிகவும் கடுமையாகவே இருந்தது. இதில் 16 மணி நேரம் தொடர்ந்து கயிற்றை விடாமல் பிடித்து டாஸ்கில் வெற்றி பெற்று கடந்த வாரம் தலைவர் ஆனார் தாமரை.

போட்டியாளர்கள் உற்சாகம்
இதையடுத்து, நேற்று போட்டியாளர்களை தனித்தனியாக அழைத்து இன்னும் 20 நாட்களே இருப்பதால் விளையாட்டில் உள்ள நிறை குறைகளை போட்டியாளர்களுக்கு சுட்டிக்காட்டி யாருக்கும் விட்டுக்கொடுக்காமல், விளையாட்டில் கவனம் செலுத்தி விளையாடுங்கள் என்றார். இதனால் போட்டியாளர்கள் உற்சாகம் அடைந்தனர்.

எலிமினேஷன்
இதையடுத்து, இந்த வாரம் நாமினேட் செய்யப்பட்ட 6 பேர்களில் அக்ஷரா, வருண் மற்றும் நிரூப் ஆகிய மூவரும் கிட்டத்தட்ட ஒரே சதவீத வாக்குகளைப் பெற்றிருந்த நிலையில் அவர்களில் குறைந்த வாக்குகள் பெற்ற அக்ஷரா எலிமினேட் செய்யப்பட்ட நிலையில் அவருடன் வருணும் எலிமினேட் செய்யப்பட்டதாக இணையத்தில் தகவல்கள் வெளியாகின.

முதல் ப்ரோமோ
இந்த தகவலை உறுதிப்படுத்தும் வகையில் இன்றைய நிகழ்ச்சிக்கான முதல் ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதில், கமல்ஹாசன் எதுவும் பேசாமல் ஆடியன்சை பார்த்து 2 பேர் அவுட் என்பது போல சைகை காட்டுகிறார். மேலும் , இரண்டு விரல்களை உயர்த்திக் காட்டி எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்று கூறியுள்ளார். இதனால், பிக் பாஸ் வீட்டிலிருந்து இன்று 2 பேர் வெளியேறுவது உறுதியாகி உள்ளது.


Click it and Unblock the Notifications











