பாவனிக்கு தைரியம் இல்லை… நச்சுனு சொன்ன தாமரை… பாராட்டிய கமல் !

சென்னை : பிக்பாஸ் நிகழ்ச்சி 84 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிக்கிறது. எல்லா சீசனை போல் இந்த பிக்பாஸ் சீசன் போட்டியாளர்களுக்கும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

Recommended Video

எதிர்பாராததை எதிர்பாருங்கள்!! இந்த வாரம் BBல் இருந்து வெளியேறும் Contestant | Varun, Niroop, Akshara

தற்போது பிக்பாஸ் வீட்டினுள் 10 போட்டியாளர்கள் உள்ளனர். இதில் இன்று யார்வெளியேறப்போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு போட்டியாளர்களிடையே எழுந்துள்ளது.

இதையடுத்து, அன்றைய எபிசோடுக்கான 2வது ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதில், போட்டியாளர்களை இருவர் இருவராக உட்காரச் சொல்லி எனக்கு ஏன் வோட் போட வேண்டும்,இவருக்கு ஏன் ஓட்டுப்போடக்கூடாது என்று பிரச்சினையை கிளப்பி உள்ளார் கமல்.

பிக் பாஸ் சீசன் 5

பிக் பாஸ் சீசன் 5

பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில், நிரூப்,சிபி, அக்‌ஷரா, வருண், தாமரை, ப்ரியங்கா, ராஜூ, பாவனி, சஞ்சீவ் மற்றும் அமீர். சஞ்சீவ், அமீர் இருவரும் வைல்ட் கார்ட் போட்டியாளராக வீட்டினுள் நுழைந்து தற்போது வீட்டில் உள்ள அனைவருடனும் ஒன்றாக ஒன்றிவிட்டனர்.

அசத்தல் நடனம்

அசத்தல் நடனம்

நேற்றைய பிக் பாஸ் நிகழ்ச்சி கலகலவென சுவாரசியமாகவே முடிந்தது என்று சொல்லலாம். அமீரின் குடும்பத்தினர் வீட்டிற்குள் வந்து அவருக்கு சில பல அட்வைஸ்களை கொடுத்து, வாத்தி கம்மிங் பாடலுக்கு அசத்தலாக நடனம் ஆடி அனைவரையும் மகிழ்வித்தனர்.

பிரியங்கா சேவ்

பிரியங்கா சேவ்

அதேபோல கமலும், யாரையும் வறுத்தெடுக்காமல் கலகலப்பாகவே பேசினார். வழக்கத்திற்கு மாறாக போட்டியாளர்களை தனியாக அழைத்து , சில பல அறிவுரைகளை கூறினார் கமல். மேலும், கிறிஸ்துமஸ் பண்டிகை என்பதால் போட்டியாளர்களுக்கு கிஃப்ட் கொடுத்தார். அதில் முதல் ஆளாக பிரியங்கா சேவ் செய்யப்பட்டார். இதையடுத்து, மகிழ்ச்சியில் துள்ளி குதித்தார் பிரியங்கா.

முதல் ப்ரோமோ

முதல் ப்ரோமோ

இதையடுத்து இன்று யார் வெளியேறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில், இன்று இரண்டு எவிக்ஷன் இருக்கும் என்பதை உறுதி செய்யும் விதமாக முதல் ப்ரோமோவில், இரு விரல்களை உயர்த்திக் காட்டி எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்று கூறியிருந்தார்.

பாவனிக்கு தைரியம் இல்லை

பாவனிக்கு தைரியம் இல்லை

தற்போது, இன்றைய எபிசோடுக்கான 2வது ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதில் இருவர் இருவராக உட்காரச் சொல்லி எனக்கு ஏன் வோட் போட வேண்டும்,இவருக்கு ஏன் ஓட்டுப்போடக்கூடாது என்ற கேள்வி கேட்கிறார் கமல். இதில் நிரூப் சிபி இருவரும் ஜோடியாக அமர்ந்து இருக்க, நிரூப், சிபி இன்னும் கேமிற்குள்ளேயே வரவில்லை என்கிறார். இதையடுத்து, பாவனி தாமரை ஜோடியாக அமர்ந்து இருக்கிறார்கள் அப்போது, தாமரை, பாவனிக்கு என் அளவுக்கு தைரியமே இல்லை என கூற, தெளிவாக சொல்லிட்டாங்க என்று பாராட்டுகிறார் கமல், ஸோ இன்றைய எபிசோடில் போட்டியாளர்கள் இடையே கொளுத்தி போட்டுள்ளார் கமல்ஹாசன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X