பிக் பாஸ் வீட்டில் அடிதடி… நான் என்ன இளிச்சவாயா… புலம்பும் பிரியங்கா!
சென்னை : பிக் பாஸ் சீசன்5 நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான 2வது ப்ரோமோ வெளியாகி உள்ளது. இதில் தாமரையும் பிரியங்காவும் ஒருவரை ஒருவர் ஆக்ரோஷமாக தாக்கிக்கொண்டுள்ளனர்.
பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி நாட்கள் நெருங்க நெருங்க டாஸ்க்குகள் மிகவும் கடுமையாகி வருகின்றன. இதனால் போட்டியாளர்கள் இடையே மன கசப்பு ஏற்பட்டு வருகிறது.
இருக்கும் மனகசப்பு போதாது, நம்ம பங்குக்கு எதையாவது கொளுத்திப் போடுவோம் என்று நேற்று ஓப்பன் நாமினேஷன் நடைபெற்றது. இதனால், போட்டியாளர்களிடையே நேரடியான பகை ஏற்பட்டுள்ளது.

டிக்கெட் டு ஃபினாலே
பிக் பாஸ் வீட்டில் அனைவரும் எதிர்பார்த்த டிக்கெட் ஃபினாலே டாஸ்க் நடைபெற்றது. டின்னர் சாப்புடுங்க நல்லா சண்டைபோடுங்க என்பதை சொல்லாமல் சொல்லிவிட்டு போனார் பிக் பாஸ். இதையடுத்து, ஃபினாலே டிக்கெட் பெற தகுதியில்லாத நபராக நிரூப்பை மற்ற ஹவுஸ்மேட்டுகள் தேர்வு செய்தனர். இதையடுத்து அவர் போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டார்.

தள்ளுமுள்ளு
இதையடுத்து, இன்று டிக்கெட் டு ஃபினாலே டாஸ்கின் அடுத்த டாஸ்க் நடைபெற்று வருகிறது. இன்று காலை வெளியான முதல் ப்ரோமோவிலேயே அனைவரும் அடித்துப்பிடித்து ஓடினர்.பிரியங்காவும் தாமரையும் ஒருவரை ஒருவர் பிடித்து தள்ளிக்கொள்வது ப்ரோமோவில் இடம் பெற்று இருந்தது.

நான் என்ன இளிச்சவாயா
இதையடுத்து தற்போது வெளியாகி உள்ள 2வது ப்ரோமேவில், தாமரை பிரியங்காவை பிடித்து ஆக்ரோஷமாக தள்ளுகிறார், பதிலுக்கு பிரியங்காவும் தாமரையை கோவத்துடனே தள்ளுகிறார். இதையடுத்து, கவலையுடன் பாவனியிடம் பேசும் பிரியங்கா, நான் என்ன இளிச்சவாயா.. என் மண்டையில் அப்படி எழுதி இருக்கா.. . நான் அவளுக்காக எவ்வளவு செய்து இருப்பேன் என்று கண்ணீர் மல்க கூறுகிறார் பிரியங்கா.
Recommended Video

குடுமிபிடி சண்டை
வழக்கமாக பிக் பாஸ் சீசனில் ஆண் போட்டியாளர்கள் தான் ஓவராக சண்டை போட்டுக் கொள்வார்கள். ஆனால், இந்த சீசனிலும் இல்லாத வகையில் இந்த சீசனில் தாமரையும் பிரியங்காவும் குடுமி பிடி சண்டை போட்டுள்ளனர். இவர்கள் இருவரின் சண்டையை பார்க்கும்போது இது டாஸ்க்கா... அல்லது மனதில் இருக்கும் பகையை தீர்த்துக் கொள்கிறார்களா என ரசிகர்கள் கேள்விகளை எழுப்புகின்றனர்.


Click it and Unblock the Notifications











