சுயநலமே எல்லாத்துக்கும் காரணம்… பிரியங்காவை வறுத்தெடுக்கும் நெட்டிசன்ஸ் !

சென்னை : பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் டிக்கெட் டு ஃபினாலே டாஸ்க் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் அனைத்து போட்டியாளர்களும் மிகவும் சுறுசுறுப்பாக விளையாடி வருகிறார்கள்.

தற்போது வெளியான 3வது ப்ரோமோவில், வெற்றிப்பெறக் கூடாது என்று நினைக்கும் நபர் யார் என்று கேட்டு போட்டியாளர்கள் இடையே கொளுத்திப் போட்டுள்ளார் பிக் பாஸ்.

இதற்கு பிரியங்கா ஜெயிக்கக்கூடாதுனு நான் யாரையும் சொல்ல முடியாது... நான் தோற்றுப்போனாலும் பரவா இல்லை என்று கூறியுள்ளார். இதை கேட்ட நெட்டிசன்ஸ் அவரை பங்கமாக கலாய்த்து வருகின்றனர்.

மார்டன் அரக்கி பிரியங்கா

மார்டன் அரக்கி பிரியங்கா

தற்போது வெளியாகி உள்ள 3வது ப்ரோமோவில், பிரியங்கா நான் தோற்றாலும் பரவாயில்லை என்று கூறி உள்ளதை ஒரு நெட்டிசன் கடுமையாக பிரியங்காவை கிண்டலடித்து கருத்து பதிவிட்டுள்ளார். அதில், தான் தோற்றாலும் பரவாயில்லை.. என்னை எதிர்ப்பவன் வெற்றிபெற கூடாது.. இது தான் மோசமான அரக்கனின் குணம்.. மார்டன் அரக்கி பிரியங்கா. என பதிவிட்டுள்ளார்.

பிரியங்கா சுயநலவாதி

பிரியங்கா சுயநலவாதி

மற்றொரு நெட்டிசனும் பிரியங்காவை கிண்டலடித்து தனது கருத்தை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், எல்லா புரோமலயும் இவள யாரும் திட்டாம குறை சொல்லாம இல்ல .. பிரியங்காவின் சுயநலமே எல்லாத்துக்கும் காரணம். என பதிவிட்டுள்ளார்.

வாய் மட்டும் இல்லைனா

வாய் மட்டும் இல்லைனா

தோற்றாலும் பரவாயில்லை என ப்ரோமோவில் சொன்னதை கேட்டு கடுப்பான நெட்டிசன்ஸ், டிக்கெட் டு ஃபினாலே முதல் டாஸ்கில எனக்கு டிக்கெட் வேணும்னா ஜெயிக்கணும்னு அப்படித்தான் நீயும் விளையாடனும்னு தாமரைக்கு பாடம் எடுத்த பிரியங்கா, இன்னைக்கு அவங்க தோற்றாலும் பரவா இல்லையாம், இன்னொருத்தர் ஜெயிக்க கூடாதுனு சொல்ல முடியாதாம், இந்த வாய் இருக்கே வாய், அது மட்டும் இல்லைனா. என பதிவிட்டுள்ளார்.

யார் அவுட்

யார் அவுட்

டிக்கெட் டு ஃபினாலே டாஸ்கில் இரண்டு டாஸ்குகள் முடிவடைந்துள்ளது. இதில் 3 பேர் தற்போது வெளியேறி உள்ளனர். இதனால் ஒரு நெட்டிசன் இன்று எந்த ரெண்டு பேர் அவுட். என பதிவிட்டுள்ளார்.

என்ன உருட்டு

என்ன உருட்டு

மற்றொரு நெட்டிசன், தோற்க போறோம்னு தெரிஞ்சதும் என்ன உருட்டு உருட்டுறா பாருங்க, இவங்களால யாரும் ஜெயிக்கக்கூடாதுனு சொல்ல முடியாதாம், So அவங்க தோற்றாலும் பறவையில்லையாம், இப்படி சொல்லத்தான் நிரூபை Gameல இருந்து தூக்கினியா. நிரூப் விளையாட முடியாம தவிக்கிறான், நீ இருந்து டையலாக் அடிச்சுட்டு இருக்க. என பதிவிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X