நான் தோற்றாலும் பரவாயில்லை… புது யுக்தியை கையில் எடுத்த பிரியங்கா!
சென்னை : பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான 3வது ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதிலும் பிரியங்காவே பிரதான இடத்தை பிடித்துள்ளார்.
பிக் பாஸ் வீட்டில் தற்போது தாமரை, பாவனி, பிரியங்கா, ராஜூ,சிபி, அமீர்,சஞ்ஜீவ், நிரூப் என 8 போட்டியாளர்கள் இருக்கின்றனர்.
இதில் டிக்கெட் டு ஃபினாலே டாஸ்கிலிருந்து தாமரை, பாவனி , நிரூப் வெளியேறியதை அடுத்து மீதமுள்ள 5 போட்டியாளர்கள் டிக்கெட் டு ஃபினாலே டாஸ்க்கை விளையாடி வருகின்றனர்.

டிக்கெட் டு ஃபினாலே
பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்த டிக்கெட் டு ஃபினாலே டாஸ்க் விறுவிறுப்பாக நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது. இதில், முதல் நாளில் ஒற்றுமையாக இருந்த போட்டியாளர்கள் தற்போது எதிரிகளாக மாறி ஒருவரை ஒருவர் குறை கூறி வருகின்றனர்.

அன்பு வேறு கேம் வேறு
பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் இன்றைய எபிசோடுக்கான ப்ரோமோ வெளியாகி வருகின்றன. இதில் காலையில் வெளியான 2வது ப்ரோமோவில், பிரியங்கா, பாவனி மீதான அன்பை ஒரு ஆயுதமாக இந்த கேமிற்காக பயன்படுத்துவதாக கூறி அமீரின் ஃபோட்டோ மீது பந்தை வீசுகிறார். ஆனால் அமீர், அதுவேறு, கேம் வேறு. நீ என் மீது காட்டும் அன்பு தான் போலியாக தெரிகிறது என்று கூறி பிரியங்கா மீது கலர் பந்தை வீசினார்.

நான் தோற்றால் பரவால
இதையடுத்து, தற்போது வெளியாகி உள்ள ப்ரோமோவில், வெற்றிப்பெறக் கூடாது என்று நினைக்கும் நபர் யார் என்று கேட்டு போட்டியாளர்கள் இடையே கொளுத்திப்போட்டுள்ளார் பிக் பாஸ். இதற்கு பிரியங்கா ஜெயிக்கக்கூடாதுனு நான் யாரையும் சொல்ல முடியாது... நான் தோற்றுப்போனாலும் பரவா இல்லை என்று கூறிக்கொண்டு தனது புகைப்படத்தின் மீது கலர் பந்தை வீசுகிறார் பிரியங்கா.
Recommended Video

கேமுக்கு உண்மையா இல்லை
இதையடுத்து, நிரூப் கேமுக்கு நீங்க உண்மையாவே இல்லை என்று பிரியங்காவிடம் கூறுகிறார். இதற்கு பிரியங்கா உன்னுடைய இந்த கேள்விக்கு நான் பதில் கூற முடியாது என்று கூறுகிறார். இன்று வெளியான 3 ப்ரோமோவிலும் பிரியங்காவே பிரதான இடத்தை பிடித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











