Don't Miss!
- News
முஸ்லிம்கள் மீது வன்முறை; இந்து பிரபாகரன், கோட்சே மகாத்மா- வட இந்திய சாமியார்கள் மாநாடு-ப்ளாஷ்பேக்
- Finance
கேட்பரீஸ் சாக்லேட்டில் புழுக்கள்: ரூ.50 லட்சம் நஷ்ட ஈடு கேட்டவருக்கு கிடைத்த தீர்ப்பு என்ன தெரியுமா?
- Lifestyle
Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்களின் பணிச்சுமை சற்று அதிகமாக இருக்கும்...
- Sports
ஒரே ஓவரில் மாறிய விதி.. ஹாசல்வுட் செய்த கடைசி நேர மேஜிக்.. ஆர்சிபி அணி அபார வெற்றி பெற்றது எப்படி?
- Automobiles
ஒரே நாளில் இத்தனை பேருக்கு அபராதமா? தமிழக காவல் துறை அதிரடி... காரணம் தெரிஞ்சா இனி இந்த தப்பை பண்ண மாட்டீங்க!
- Technology
16எம்பி ரியர் கேமரா, 5000 எம்ஏஎச் பேட்டரியுடன் மோட்டோ இ32எஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்.!
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
இவ்வளவுதாங்க வாழ்க்கை… தத்துவம் பேசிய பிரியங்கா… லேட்டஸ்ட் ப்ரோமோ !
சென்னை : பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் இந்த வாரம் முழுக்க டிக்கெட் டூ பினாலே டாஸ்க் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில் யாருக்கு டிக்கெட் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது.
18 போட்டியாளர்களுடன் தொடங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில், இரண்டு போட்டியாளர்கள் வைல்ட் கார்டு என்ட்ரியாக அறிமுகமாகினர். தற்போது வீட்டில் 8 போட்டியாளர்கள் மட்டுமே மிச்சம் இருக்கின்றனர்.
இந்த வார நாமினேஷனில் 8 போட்டியாளர்களின் பெயரும் லிஸ்டில் இருக்கிறார்கள். இதில் யார் வெளியேறுவார் என்ற எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் கூடிக்கொண்டே செல்கிறது.
இது எப்படி இருக்கு... இசைஞானியின் வேற லெவல் புத்தாண்டு வாழ்த்து!

டிக்கெட் டு பினாலே
பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது நேரடியாக பைனலுக்கு செல்லும் போட்டிகளுக்கான டிக்கெட் டு ஃபினாலே டாஸ்க் நடைபெற்று வருகிறது. இதில் 8 போட்டியாளர்கள் பங்கேற்ற நிலையில்,முதல் டாஸ்கிலேயே நிரூப் வெளியேற்றப்பட்டார். அடுத்தடுத்து நடந்த போட்டியில் பாவனி, தாமரை, ராஜு,நிரூப், சஞ்ஜீவ் என ஒவ்வொருவராக வெளியேறினர்.

யார் ஜெயிப்பார்கள்
டிக்கெட் டு ஃபினாலே டாஸ்கின் கடைசி போட்டியில் சிபி மற்றும் அமீர் கலந்து கொண்டு வருகின்றனர். இவர்கள் இருவரில் யார் ஜெயிப்பார்கள் என்று ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு கூடியிருக்கிறது. காலையில் வெளியான முதல் ப்ரோமோவில் கொட்டும் மழையில் கயிற்றை பிடித்துக்கொண்டு ஒற்றை காலில் நிற்கின்றனர்.

அமீருக்கு வாழ்த்து
அமீருக்கு ஏற்கனவே காலில் அடிபட்டு இருப்பதால் அவரால் விளையாட முடியுமா இல்லை... அவர் போட்டியிலிருந்து விலகி விடுவாரா என ரசிகர்கள் கேள்வி கேட்டு வருகின்றனர். ஒரு சில ரசிகர்கள் அமீர் வெற்றி பெற வாழ்த்து கூறி வருகின்றனர். பிக்பாஸ் வீட்டிலிருக்கும் ராஜூ . நிரூப்பிற்கும் கூட அமீர் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணம் உள்ளது.

ஒன்னும் புரியல
இந்நிலையில், தற்போது வெளியாகி உள்ள 2வது ப்ரோமோவில், பிரியங்கா நான் எமோஷனல் பர்ஷன் என்பது எனக்கு முன்பே தெரியும்,ஒரு விஷயம் உன்னோடதா இருந்தா, அது நிச்சயம் உன்கிட்டத்தான் இருக்கும் என்று தத்துவத்தை கூறுகிறார். இந்த ப்ரோமோவில் பிரியங்கா என்னத்தான் சொல்லவரானு ஒன்றுமே புரியல, ஒரே குழப்பமா இருக்கு நிகழ்ச்சியை பார்த்தாத்தான் புரியும் போல என்று ரசிகர்கள் கருத்துக்கூறி வருகின்றனர்.