இது எல்லாம் ஒரு ப்ரோமோவா… செம மொக்க… கடுப்பான நெட்டிசன்ஸ் !
சென்னை : பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான 2வது ப்ரோமோவில் பிரியங்கா வாழ்க்கை தத்துவத்தை பேசி இருக்கிறார்.
இதைப்பார்த்த நெட்டிசன்ஸ்,என்ன பிரியங்கா ரொம்ப ஓவரா பேசி இருக்க என்று கலாய்த்து வருகின்றனர்.
ப்ரோமோவில் பிரதான இடம் பிடிக்கும் பிரியங்காவை கிண்டல் அடித்து வருகின்றனர்.

சோறு தான் முக்கியம்
பிரியங்கா சாப்பாடுனா உயிரையே விட்டுவார் என்பது அனைவருக்கும் தெரிந்தது. இதை கிண்டலடிக்கும் வகையில் ஒரு நெட்டிசன்ஸ், என்ன டாஸ்க் நடந்தாலும் யார் சண்டை போட்டாலும் நமக்கு சோறு முக்கியம் னு இந்த வீட்டு நிறைய கத்துகிட்டேன். என பதிவிட்டுள்ளார்.

எனக்கே புரியல
மற்றொரு நெட்டிசன்ஸ், சத்தியமா புரியல பிரியங்கா.. மன்னிக்கவும்... எதுக்கு சிம்பிள் ஆ முடிகிறதா 1 கிமீ பேசுறீங்க ? நான் உன்னை வெறுப்பவன் அல்ல. ஆனால் இது எனக்கே புரியல, நிரூப் மாதிரி வேற மொழி ஆளுக்கு சத்தியமா புரியாது. என பதிவிட்டுள்ளார்.

புரியவில்லையா
இரண்டாவது ப்ரோமோவில் பிரியங்கா பேசியதை பார்த்து கடுப்பான மற்றொரு நெட்டிசன்ஸ், எனக்கு புரியுது.. பிரியங்கா தமிழில் தான் பேசுகிறாள்...புரிகிறது . உங்களுக்கு தமிழ் புரியவில்லையா. நான் ஆங்கிலத்தில் விளக்குகிறேன். ஒன்று உங்களின்தாக இருந்தால் அது உங்களின் சொந்தமாக இருக்கும் இல்லையென்றால் விலகிவிடும். என பதிவிட்டுள்ளார்.

மொக்கை ப்ரோமோ
மொக்கையான ப்ரோமோவால் கடுப்பான நெட்டிசன்ஸ் ஒருவர், டிக்கெட் டு ஃபினாலே வரை game interesting ஆ இருக்கும் அதுக்கு பின்னாடி சும்மா இருந்தே மொக்க போடுவானுக. இங்க டிக்கெட் டு ஃபினாலே வே மொக்கையா தான் போச்சு. இனி 106 நாள் வரைக்கும் ப்ரோமோ ஷோ எல்லாமே இப்படி தான் சூர மொக்கையா இருக்கும்.இந்த சீசனை ஞாபகம் வச்சுக்கும் படியா ஒரு உருப்படியான டாஸ்க் பண்ணிங்களாடா. என பதிவிட்டுள்ளார்.
Recommended Video

நரியங்கா
மற்றொரு நெட்டிசன்ஸ், வடிவேலுவில் புகைப்படத்தை பதிவிட்டு, யம்மா நரியங்கா!...போதும் போதும் ரொம்ப லென்தா போயிட்டு இருக்கு.. என பதிவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











