நான் கேட்ட கிப்ட் தான் வேணும்… பாவனியிடம் வழியும் அமீர்… கடுப்பாகும் ரசிகர்கள் !
சென்னை : பிக் சீசன் 5 நிகழ்ச்சியில் தனி லவ் ட்ராக் ஓடி வருகிறது. இதைப்பார்த்து ஒரு சில ரசிகர்கள் கடுப்பானாலும், சண்டையைப் பார்த்து நொத்துப்போன ரசிகர்களுக்கு இது சற்று ஆறுதலாகவே உள்ளது.
பிக்பாஸ் வீட்டுக்குள் மிகப்பெரிய சர்ச்சைக்குரிய விஷயமாக பாவனி மற்றும் காதல் விவகாரம் கிசுகிசுக்கப்பட்டது.
ஆனால், அபிநய் இதை முற்றிலுமாக மறுத்தார். இறுதியில், இந்த விவகாரத்தில் கமலஹாசன் தலையிட்டு பிரச்சினை முடித்து வந்தார்.

நெருங்கி நண்பர்கள்
வைல்டு கார்டு எண்ட்ரி மூலம் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்த, அமீர் இந்த சந்தர்ப்பதை சரியாக பயன்படுத்திக் கொண்டு பாவனியிடம் நெருக்கமாக பழகி வருகிறார். அமீர் பிக் பாஸ் வீட்டிற்கு வந்த நாளிலிருந்தே பாவனியில் பின்னாலே சுற்றி வருகிறார். அடித்து பிடித்து விளையாடி வந்த இவர்களின் நட்பு, காதலிக்கிறேன் என்று பாவனியிடம் அமீர் கூறும் அளவுக்கு சென்றது.

காதோரம் முத்தம்
இதையடுத்து, நேற்று,பெட்ரூமில் பாவனி மற்றும் அமீர் பேசிக்கொண்டு இருந்தனர். அப்போது பாவனியிடம், ஒன்று கேட்கலாமா என அமீர் கேட்க, என்ன வாழ்க்கையையா கேட்க போகிறாய். சும்மா கேளுடா என்றார் பாவனி. அப்போது பாவனியின் காதோரம் ரகசியம் சொல்வதுபோல் போய், முத்தம் கொடுத்து விட்டு, கூலாக ஸ்டிரஸ் இல்லாமல் நிம்மதியாக தூங்கு என்றார். ஆனால் அவர் செய்தது பிடிக்கவில்லை என்று பாவனி சிரித்துக்கொண்டே கூறினார்.

வழியும் அமீர்
இதையடுத்து, இன்றை எபிசோடில், அமீர் மற்றும் பாவனி தனியே பேசிக்கொண்டு இருந்தனர். அப்போது, பாவனி இன்னைக்கு நான் வெளியில போனா என்னடா பண்ணுவா என்று அமீரைப் பார்த்து கேட்டார். அதற்கு, அமீர் நீ போக மாட்டடி என்றார். மேலும், எப்படியும் எனக்கு கிப்ட் இருக்கு.. நேத்து நைட் நான் கேட்ட கிப்ட் எனக்கு வேணும் என்று கேட்டு பாவனியிடம் வழிந்து வருகிறார் அமீர்.

என்ன கிப்டா இருக்கும்
இதைப்பார்த்த ரசிகர்கள் அப்படி என்ன கிப்ட் கேட்டு இருப்பான் என்று கேட்டு வருகின்றனர். நாளுக்கு நாள் அமீர் செய்து வரும் செய்கை ரசிகர்களை முகம் சுளிக்க வைத்துள்ளது. ஒ ரு கேம் நிகழ்ச்சியில் இப்படி செய்யலாமா என்றும் கேட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











