அமீர் கொடுத்த மருத்துவ முத்தம்.. கமல் கண்டுக்கொள்ளாதது ஏன்? சோஷியல் மீடியாவில் வைரலாகும் கேள்வி!
சென்னை : பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் அதிகம் பேசு பொருளாக இருப்பவர் பாவனி... பார்ப்பதற்கு செம க்யூட்டாக குட்டி டால் போல இருப்பதால் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உண்டு.
வெளியில் மட்டும் ரசிகர்கள் இல்லீங்க வீட்டிற்கு உள்ளேயும் அவருக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள்.
சர்ச்சையில் அவ்வப்போது சிக்கி கொள்வதற்கும் அதுதான் முக்கிய காரணம் என்று சொல்லலாம்.

லவ் பண்றியா
சில வாரங்களுக்கு முன்பு நடந்த பாட்டில் டாஸ்கின் போது, பாவனியை லவ் பண்றியா என ராஜு கேட்டது தவறு என வீட்டில் உள்ள அனைவரும் பேசினர். அதற்கு ராஜு மன்னிப்பும் கேட்டார். அதற்கு பிறகும் பாவனி பலரிடமும் அதை பற்றி பேசி புலம்பிக் கொண்டிருந்தார்.

குறும்படம்
ஒரு கட்டத்தில் இந்த பிரச்சினை பூதாகரமாக வெடித்த நிலையில், பாவனி, அபிநய்யை பற்றி பேசியதை குறும்படம் போட்டு காண்பித்து பாவனியின் முகத்திரையை கிழித்தார் கமல். இதனால், மனவேதனை அடைந்த அபிநய் பாவனியிடம் பேசுவதை தவிர்த்துவித்துவிட்டார்.

நெருங்கி பழகும் அமீர்
இந்த சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்திக்கொண்ட அமீர், பாவனியிடம் நெருங்கிப்பழகி, கடைசியாக காதலையும் சொல்லிவிட்டார். காதலர்கள் பார்கில் உலாவது போல உலாவுவது... பாவனிக்காக அமீர் காத்திருந்து சாப்பிடுவது என கொஞ்சம் ஓவராத்தான் போகுது என்று ரசிகர்கள் இருவரையும் விமர்சனம் செய்து வருகின்றனர்.

கன்னத்தில் முத்தம்
மேலும், பாவனியை நெருங்கிய அமீர் ரகசியம் கூறுவது போல அருகில் சென்று பாவனியின் கன்னத்தில் முத்தமிட்டார். ஏற்கனவே சீசன் ஒன்றில் ஓவியவிடம் இதே போல நடந்து கொண்ட ஆரவ் அதற்கு மருத்துவ முத்தம் என்னும் பெயரை சூட்டி விட்டு ஓவியாவை கழட்டி விட்டுவிட்டார்.

கண்டு கொள்ளவில்லை
இதேபோல தற்போது அமீர் நடந்து கொள்வதால் கடுப்பான ரசிகர்கள் வைல்ட் கார்ட் மூலம் உள்ளே வந்த அமீரை உடனடியாக ரெட் கார்ட் கொடுத்து வெளியே அனுப்ப வேண்டும் என்று ரசிகர்கள் வலியுறுத்தினார். இந்த விவகாரம் குறித்து கமல் நிச்சயம் பிரச்சினை எழுப்புவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், கமல் முத்த விவகாரம் குறித்து கண்டு கொள்ளவே இல்லை.

சோஷியல் மீடியாவில் விவாதம்
முந்தைய சீசனில், மகத், இன்னொரு நடிகை படுக்கையில் படுத்து கிடந்தபோது இதும் இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சி அல்ல நான் அனுமதிக்க மாட்டேன் என்று கோபப்பட்ட கமல், பிக்பாஸை குழந்தைகளும் பார்க்கிறார்கள் நல்ல பண்பை அவர்களுக்கு சொல்லும் வகையில் இருக்கவேண்டும் என உணர்த்தியவர் அமீரின் அத்துமீறலையும், அதை பாவனி அனுமதித்து கண்டுக்கொள்ளாமல் இருப்பதையும் எப்படி கண்டு கொல்லாமல் இருக்கிறார் என்கிற கேள்வி வலைதளத்தில் விவாதமாகி உள்ளது.


Click it and Unblock the Notifications











