கூட இருந்தே குழி தோண்டுறான்… அபிஷேக் முகத்திரையை கிழித்த அமீர் !
சென்னை : கொரோனா பாதிப்பில் இருந்து மீண்ட கமல்ஹாசன் மீண்டும் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சி நேற்று அமர்க்களமாக இருந்தது.
Recommended Video
முதலில் அண்ணாச்சியிடமிருந்து தொடங்கிய கமல், இந்த வாரம் கேப்டனாக இருந்த நிரூப்பின் கேப்டன்சி எப்படி இருந்தது என மற்ற போட்டியாளர்களிடம் கருத்து.
இந்த வாரம் 10 பேர் நாமினேஷனில் இருந்த நிலையில் முதல் ஆளாக ராஜு சேவ் செய்யப்பட்டார்.

நடன இயக்குநர் அமீரை
வைல்டு கார்டு என்ட்ரியில் உள்ளே வந்த அமீர், பிரியங்காவுக்கு புத்தி சொல்லி வருகிறார். நிரூப், பிரியங்கா சண்டை போட்டுக்கொண்ட போதும், சண்டை போடாதீங்க என்றும் அபிஷேக் உங்களை ஏற்றிவிடுகிறார் என்றும் வெளியில் உங்க பெயர் மிகவும் டேமேஜ் ஆகி உள்ளது என்று அவ்வப்போது பல புத்திமதிகளை கூறி வருகிறார்.

குழி பறிப்பாங்க
நேற்றைய எபிசோடில், கமல் அமீரிடம் நீங்கள் பிரியங்காவிற்கு பல அட்வைஸ் கொடுக்குறீங்க அதை அவர்கள் ஏற்றுக்கொள்கிறார்களா என்று கேட்டார். பிரியங்கா விடம் அபிஷேக் உங்களை ஏத்திவிடுகிறார் என்று கூறினேன். பிரியங்கா அபிஷேக்கை நம்பி மொத்தமா பேரை கெடுத்துக்கிட்டாங்க. கூடவே இருந்து சில பேர் குழி பறிப்பாங்க.. என் ஃபிரண்ட் பெயர் கெட்டு போகக்கூடாதுனு நினைச்சேன்னா அவங்களுக்கு அட்வைஸ் பண்ணுவேன். ஏத்தி விட்டு வேடிக்கை பார்க்க மாட்டேன் என்று கமலின் முன்பாகவே கூறினார் அமீர்.

காரசார வாக்குவாதம்
இதையடுத்து, அபிஷேக் அமீரிடம் நான் பிரியங்காவிற்கு குழிபறிக்கவில்லை, பிரியங்காவிற்கு எது சரினு படுதோ அதை அவ செய்கிறார் என்றார். உடனே அமீர், ஒரு நல்ல ஃபிரண்ட் சண்டையை மூட்டி விட்டு வெடிக்கை பார்க்க மாட்டான் என்று கூற இருவருக்கும் காரசார வாக்குவாதம் நடந்தது

கை நீட்டி பேசாதே
அப்போது, அமீர், அபிஷேக்கிடம் முதலில் அமைதியா பேசு,ஏன் கத்தி பேசுற என்று கூறினார். உடனே அபிஷேக், நீ முதலில் கையை நீட்டி பேசாதே கைய கீழே போடு என்று கூற , நான் அப்படித்தான்டா பேசுவேன் என்றார் அமீர், நீ செய்வது தப்பு அது சொன்னா உனக்கு கோவம் வருதா என்று மீண்டும் இருவரும் சண்டையை தொடங்கினர்.


Click it and Unblock the Notifications











