பிக்பாஸ் வீட்டுக்குள் 7வது போட்டியாளராக நுழைந்த நடிகர் ஜெமினி கணேசனின் பேரன்.. யாருன்னு பாருங்க!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7வது போட்டியாளராக நடிகர் அபினய் வட்டி பிக்பாஸ் வீட்டுக்குள் சென்றுள்ளார்.
Recommended Video
பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் கிராண்ட் லாஞ்ச் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது.
இதுவரை பிக்பாஸ் வீட்டுக்குள் 6 போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டுக்குள் சென்றுள்ளனர்.

ஜெமினி கணேசன் பேரன்
இந்நிலையில் 7வது போட்டியாளராக நடிகர் அபினய் வட்டி பிக்பாஸ் வீட்டுக்குள் சென்றுள்ளார். ஜெமினி கணேசன் மற்றும் சாவித்ரியின் பேரன் ஆவார். அபினய் சினிமா நடிகராகவும் உள்ளார். யங் இந்தியா என்ற தெலுங்கு படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானார்.

விரைவில் சுகர் படம்
தமிழில் ராமானுஜன் என்ற படத்தில் நடித்துள்ளார் அபினய். இந்தப் படம் கணித மேதை ராமானுஜனின் வாழ்க்கை வரலா படமாகும். சென்னை 28 2 படத்திலும் நடித்துள்ளார். இதேபோல் சுகர் படத்தில் சிம்ரனுக்கு ஜோடியாக நடித்துள்ளார் அபினய். இந்த படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது.

விவசாயத்தில் ஆர்வம்
அபினய் டென்னிஸ் வீரர் ஆவார். விவசாயத்திலும் ஆர்வம் உள்ள அபினய், ஈசிஆரில் விவசாயம் செய்து வருகிறார். தன்னை பண்ணை தோட்டத்தில் மாடு மற்றும் ஆடுகளையும் வளர்த்து வருகிறார். நடிகர் அபினய்க்கு அபர்ணா என்ற மனைவியும் ஸ்வாஸ்திகா என்ற மகளும் உள்ளனர்.

கமல் பகிர்ந்த சுவாரசியம்
தற்போது பிக்பாஸ் வீட்டுக்குள் சென்றுள்ளார் அபினய். அபினயுடன் பேசிய கமல் களத்தூர் கண்ணம்மா படத்தில் அவரது தாத்தா மற்றும் பாட்டியுடன் நடித்த அனுபவங்களையும் அப்போது நடந்த சுவாரசிய சம்பவங்களையும் பகிர்ந்து கொண்டார்.


Click it and Unblock the Notifications











