பிக்பாஸ் வீட்டுக்குள் 2வது போட்டியாளராக நுழைந்தார் நடிகர் ராஜு ஜெயமோகன்... யார் இவர்?

சென்னை: பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் இரண்டாவது போட்டியாளராக நடிகர் ராஜு ஜெயமோகன் பிக்பாஸ் வீட்டுக்குள் சென்றுள்ளார்.

Recommended Video

Bigg Boss 5 Confirmed Contestant List | Kamal Hassan, BB 5 Grand Launch

பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி வழக்கம் போலவே கோலாகலமாக தொடங்கியுள்ளது. கடந்த 4 சீசன்களை தொகுத்து வழங்கிய கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்குகிறார்.

பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் முதல் போட்டியாளராக கானா பாடல் பாடும் பாடகியான இசைவானி பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றார்.

கனா காணும் காலங்கள்

கனா காணும் காலங்கள்

அவரை தொடர்ந்து இரண்டாவது போட்டியாளராக, நடிகர் ராஜு ஜெயமோகன் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ளார். திருநெல்வேலியை சேர்ந்த இவர் பிஎஸ்சி விஷ்வல் கம்யூனிகேஷன் முடித்துள்ளார். இயக்குநரும் நடிகருமான பாக்கியராஜ் உடன் சில காலம் உதவி இயக்குநராக வேலை செய்துள்ளார். இவர் முதல் சீரியல் கனா காணும் காலங்கள் கல்லூரி சாலை சீரியல் ஆகும்.

பல சீரியல்களில் வாய்ப்பு

பல சீரியல்களில் வாய்ப்பு

இதனை தொடர்ந்து பல்வேறு சீரியல்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார் ராஜு. சரவணன் மீனாட்சி தொடரில் நடித்தார். இதில் கவினின் தோழனாக நடித்திருந்தார். நல்ல ரீச் கிடைத்தது. பின்னர் ஆண்டாள் அழகர் சீரியலில் நடித்தார். பின்னர் படங்களில் நடிக்க தொடங்கினார்.

பிக்பாஸ் கவினின் நண்பர்

பிக்பாஸ் கவினின் நண்பர்


முதன் முதலில் 2015ல் துணை முதல்வர் என்ற படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்தார். அதன்பிறகு 2017ல் கவினுடன் சேர்ந்து நட்புனா என்னனு தெரியுமா என்ற படத்தில் நடித்தார். அதிலும் நண்பன் கேரக்டர்தான். இவர் உண்மையில் பிக்பாஸ் கவினின் நெருங்கிய நண்பர் என கூறப்படுகிறது.

மிமிக்ரி ஆர்ட்டிஸ்ட்

மிமிக்ரி ஆர்ட்டிஸ்ட்

பாரதி கண்ணம்மா சீரியலில் வருண் என்ற ரோலில் நடித்தார். தற்போது நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் சீசன்2வில் மாயனின் நண்பனாக கதிரேசன் என்ற கேரக்டரில் நடித்து வருகிறார். சினிமா நடிகர், சீரியல் நடிகர், உதவி இயக்குநர், மிமிக்ரி ஆர்ட்டிஸ்ட் என பல்வேறு முகங்களை கொண்டுள்ளார்.

வாழ்த்திய பாக்கியராஜ்

வாழ்த்திய பாக்கியராஜ்

ராஜு இயக்குநரும் நடிகருமான பாக்கியராஜ் போல் மிமிக்ரி செய்து அசத்தினார். இதனை தொடர்ந்து வீடியோ மூலம் பிக்பாஸ் மேடைக்கு வந்த பாக்யராஜ் ராஜுவை பாராட்டியதோடு வாழ்த்தியும் பேசினார். பாக்யராஜ் வாழ்த்துக்களுடன் ராஜு தற்போது பிக்பாஸ் வீட்டுக்குள் சென்றுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X