நான் யார் என்பதை நிரூபிப்பேன்… 11வது போட்டியாளராக நுழைந்த நடிகர் வருண்!
சென்னை : நடிகர் வருண் பிக் பாஸ் இல்லத்தில் 11வது போட்டியாளராக நுழைந்தார்.
Recommended Video
நான் யார் என்பதை நிரூபிக்க இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்ததாக கூறினார்.

பிக் பாஸ் இல்லத்தில் இசைவாணி, ராஜூ மோகன், மதுமிதா,அபிஷேக் ராஜன், நமிதாமாரி முத்து, பிரியாங்கா, அபிநயா, சின்னபொண்ணு, பவானி ரெட்டி, நதியா என 10 போட்டியாளர்கள் வீட்டில் நுழைந்துள்ளனர்.
வருண்
நடிகர் ஐசரி வேலனின் பேரனும், தொழிலதிபர் ஐசரி கணேசின் மருமகன் தான் நடிகர் வருண். ஏ.எல் விஜய்யுடன் உதவி இயக்குனராக பணியாற்றி உள்ளார். இவர், தளபதி விஜய்யின் மெகா ஹிட் திரைப்படமான தலைவாவில் விஜய்யின் திரைப்படத்தில் நடித்துள்ளார்.
சிறு கதாபாத்திரத்தில
ஒருநாள் இரவில் மற்றும் போகன் திரைப்படத்தில் ஜெயம்ரவியின் நண்பனாக நடித்திருப்பார்.மேலும், வனமகன், நெருப்புடா, சம் டைம்ஸ், எல்.கே.ஜி, கோமாளி , பப்பி, சீறு உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து இருக்கிறார்.
வருண்
நடிகர் வருணை பிக் பாஸின் நாயகன் கமலஹாசன் ரசிகர்களுக்கு அறிமுகம் செய்து செய்து வைத்தார். அப்போது பேசிய வரும் இந்த நிகழ்ச்சியில் நுழைய முக்கிய காரணம் நான் யார் என்பதை அனைவரும் தெரியபடுத்துவேன் என்று கூறினார்.


Click it and Unblock the Notifications











