அக்ஷராவின் அலப்பறை… சிபியின் எதார்த்தம்… கடுப்பான ஃபேன்ஸ் !
சென்னை : பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டு இருக்கிறது.
இதில் நேற்றைய நிகழ்ச்சியில் குடும்பங்கள் சந்திக்கும் சுவாரசியமான எபிசோடு ஒளிபரப்பானது.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் மிகவும் நெகிழ்ச்சியாக இருக்கும் தருணம் இந்த குடும்பங்கள் சந்திப்புதான். நீண்ட நாட்களுக்கு பிறகு குடும்ப உறுப்பினர்களை சந்திப்பது மகிழ்ச்சியான நிகழ்வாக இருந்தது.

Freeze டாஸ்க்
பிக் பாஸ் சீசனில், இறுதியாக நடைபெறும் Freeze டாஸ்க்கிற்காக ரசிகர்கள் காத்திருப்பது வழக்கம். அந்த வகையில் நேற்று இந்த சீசனுக்கான Freeze டாஸ்க் நடைபெற்றது. இதில், அக்ஷராவின் அம்மா மற்றும் அண்ணன் வந்திருந்தனர். அதே போல சிபியின் மனைவி மற்றும் அப்பா வந்திருந்தார்.

குழந்தையாக மாறிய அக்ஷரா
நேற்று காலையே இன்று Freeze டாஸ்க் இருக்கும் என்பதால் போட்டியாளர்கள் குடும்ப உறுப்பினர்களை காண்பதற்கு ஆவலாக இருந்தனர். பிக் பாஸ் வீட்டிற்குள் முதல் நபராக அக்ஷராவின் அண்ணன் மற்றும் அம்மா வந்திருந்தனர்.அவர்களை பார்த்தவுடன் குழந்தைப்போல் துள்ளி துள்ளி குதித்து ஓரு கட்டத்தில் தேம்பி தேம்பி அழுதே விட்டார் அக்ஷரா.

எரிச்சலானது
அம்மாவை கட்டிபிடித்து அழுதது, அண்ணன் மடியில் ஏறி உட்கார்ந்துக் கொண்டு கொஞ்சியது பார்ப்பதற்கு எரிச்சலாக இருந்ததாக ரசிகர்கள் கருத்து கூறி வருகின்றனர். பிக் பாஸ் வீட்டில் இருப்பவர்கள் ஏதோ ஒரு துறையில் சிறந்தவர்களாக இருக்கின்றனர்.

அக்ஷரா அலப்பறை
பணி நிமித்தமாகவோ அல்லது சொந்த வேலையாகவோ கூட குடும்பத்தினரை விட்டு பிரிந்து வெளியூர்களுக்கு சென்று இருப்பார்கள். என்னமோ நீண்ட ஆண்டுகள் பிரிந்தவர்கள் போல அழுவதும் குதிப்பதும், கொஞ்சுவதுமாக அக்ஷரா செய்த அலப்பறை தாங்கமுடியவில்லை என்று நெட்டிசன்ஸ் அவரை கமெண்ட் அடித்து வருகின்றனர்
Recommended Video

எதார்த்தவாதி சிபி
அக்ஷரா ஒரு பக்கம் அழுது அலப்பறை செய்தார் என்றால், சிபி தனது அப்பாவை பார்த்ததும் மிகவும் எதார்த்தமாக வாங்க... வேற யாரும் வரலையா என்று கேட்டு விட்டு அமைதியாக நலம் விசாரித்தார். அதே போல ஸ்டோர் ரூமில் தனது மனைவியை பார்த்த போதும் கூட எந்தவித ரியாக்ஷனும் இல்லாமல் இருந்தார். இதுதான் எதார்த்தம் என்று பலரும் இவரை பாராட்டி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











