பாவனி அநியாயம் பண்றாங்க… அமீர் ஒரு அடிமை… பிக்பாஸிடம் புகார் கூறிய அக்ஷரா!
சென்னை : பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி நிறைவடைய இன்னும் நான்கு வாரங்களே உள்ளது.
நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டி இருந்தாலும் தற்போது வீட்டில் 10 பேர் உள்ளனர்.
இதனால் பிக்பாசில் அடுத்து என்ன நடக்க போகிறது, அடுத்து யார் வெளியேறுவார்... டாஸ்க் என்ன என்பதை தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கிறார்கள்

10 போட்டியாளர்கள்
பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியிலிருந்து அபிநய் வெளியேறியதை அடுத்து தற்போது, ராஜு ஜெயமோகன், பிரியங்கா, பாவ்னி, வருண், அக்ஷரா, தாமரை செல்வி, சிபி, நிரூப், சஞ்சீவ் மற்றும் அமீர் ஆகிய 10 போட்டியாளர்கள் உள்ளனர்.

தாமரை தலைவர்
வழக்கமாக திங்கட்கிழமை என்றாலே தலைவர் பதவிக்கான டாஸ்க், நாமினேஷன் என பரபரப்பாக இருக்கும் ,அதே பரபரப்புடன் நேற்றைய பிக் பாஸ் வீடும் இருந்தது. இதில், கேப்டன் பதவிக்காக நடத்தப்பட்ட உட்ராதீங்க எப்போவ் டாஸ்கில் இறுதி வரை நின்று விளையாடி தாமரை பிக் பாஸ் வீட்டின் இந்த வாரத் தலைவரானார்.

பாவனி அநியாயம் செய்கிறார்
இதையடுத்து, நாமினேஷன் ப்ராசஸ் தொடங்கியது அதில் பாவனியின் பெயரை நாமினேட் செய்த அக்ஷரா, அபிநய் விஷயத்தில் பாவனி செய்தது அநியாயம், அபிநய் பேசுவது பிடிக்கவில்லை என்றால், அதை அவரிடமே சொல்லி இருக்கலாம். அவர் இருந்தால் தான் என்னால சமைக்க முடியும், அபிநய், அபிநய்னு சொல்லிட்டு கடைசியில் அவரை கழட்டி விட்டுட்டாங்க என்றார்.
Recommended Video

அமீர் ஒரு அடிமை
இப்போ பாவனிக்கு அமீர்னு ஒரு அடிமை வந்திருக்கார். இந்த மாதிரி செயலை நான் படத்தில்தான் பார்த்து இருக்கிறேன் இது எனக்கு ரொம்பவும் காஷ்டமாக இருக்கிறது என்று பிக்பாஸிடம் கூறினார் அக்ஷரா. இதே கருத்தை சிபியும் கூறி பாவனியை நாமினேட் செய்தார். இதையடுத்து, இந்த வார நாமினேஷனில் பிரியங்கா, பாவனி, அக்ஷரா, ,வருண் , நிரூப் மற்றும் சிபி ஆகியோர் உள்ளனர்.


Click it and Unblock the Notifications











