தாமரையிடம் அடாவடி செய்த அண்ணாச்சி.. நியாயமா விளையாடுங்க.. முகத்திற்கு நேரா கேள்வி கேட்ட அமீர் !

சென்னை: இந்த வார லக்ஸரி பட்ஜெட் டாஸ்கிற்காக பிக் பாஸ் வீடு கட்சி அலுவலகமாக மாற்றப்பட்டது.

ஒவ்வொரு கட்சிக்கும் 4 பேர் கொண்ட 3 அரசியல் கட்சிகளாக பிரிந்து, ஒவ்வொரு கட்சிக்கும் தனி கட்சி, தனி கொடி, தனி கொள்கைகளை வகுத்துக்கொண்டனர்.

இதில், சஞ்சீவ் தலைமையில் என்பிபி என்ற கட்சியும், பிரியங்கா தலைமையில் உரக்க சொல் என்ற கட்சியும், ராஜு தலைமையில் பிக்பாஸ் மக்கள் முன்னேற்ற கழகம் என்ற கட்சியாக செயல்பட்டனர்.

கொடி நடும் டாஸ்க்

கொடி நடும் டாஸ்க்

கட்சிகளுக்கு இடையேயான போட்டி கார்டன் ஏரியாவில் நடைபெற்றது. இதில் போடப்பட்ட வட்டத்திற்குள் இரண்டு கொடி கம்பங்கள் நடப்பட்டிருந்தன. இதில் ஒவ்வொரு கட்சியில் இருந்தும் தலா ஒருவர் என மூன்று போட்டியாளர்கள் பங்கேற்க வேண்டும். முதல் பஸருக்கு போட்டியாளர்கள் தயாராக இருக்க வேண்டும். இரண்டாவது பஸருக்கு கொடி கம்பத்தில் தங்களின் கொடியை நடும் போட்டியாளர்களுக்கு தலா ஒரு மதிப்பெண் வழங்கப்படும்.

தாமரையுடன் சண்டை

தாமரையுடன் சண்டை

இந்த டாஸ்கின் போது அண்ணாச்சி , பாவ்னி, தாமரை ஆகியோர் கலந்து கொண்டனர். பஸர் அடித்ததும் ஓடி சென்று தாமரை தனது கொடியை நட்டார் அப்போது அவரின் கொடி ஒடிந்துவிட்டது. இந்த நேரத்தை பயன்படுத்திக் கொண்ட அண்ணாச்சி ,தாமரையுடன் முட்டி மோதி கடைசியில் தனது கொடியினை நட்டார்.

மோசமா விளையாடிய அண்ணாச்சி

மோசமா விளையாடிய அண்ணாச்சி

இதனால், ஆத்திரம் அடைந்த தாமரை நான் தான் முதலில் கொடியை நட்டேன். அண்ணாச்சி நீங்க ரொம்ப மோசமா விளையாடுனீங்க என்று கூறினார். உடனே அண்ணாச்சி இது விளையாட்டு, நான் உன் மீது உள்ள கோபத்தை மனதில் வைத்து விளையாடவில்லை என்று கூறினார். வழக்கமாக படபடவென்று பேசும் தாமரை ஆள விடுங்கப்பா சாமி என்பது போல அமைதியாக போய்விட்டார்.

எனக்கு தவறாக தெரியவில்லை

எனக்கு தவறாக தெரியவில்லை

இதையடுத்து, அமீர் அண்ணாச்சியிடம் நீங்க விளையாடிய முறை எனக்கு ரொம்ப தவறா தெரிஞ்சது. நீங்க நியாயமாக விளையாடவில்லை என்றார். வழக்கமா நீங்க அப்படி விளையாட மாட்டீங்க தாமரை என்பதால் வெறுப்பை மனதில் வைத்து விளையாடியது போல இருந்தது. அது எனக்கு சுத்தமா பிடிக்கல , என்னதான் விளையாட்டா இருந்தாலும் இப்படி விளையாடனுமா என்று கேட்டார். இதற்கு , நான் விளையாட்டைத்தான் விளையாடினேன் எனக்கு தவறா எதுவும் தெரிவில்லை என்று கூறினார் அண்ணாச்சி. எல்லோர் முகமும் மாறியதைப் பார்த்தேன். ஆனால் எனக்கு அது தவறாகப் படவில்லை என்றது அண்ணாச்சி கூறியதை அவரது ஈகோவை காட்டுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X