எல்லாமே தப்பா தெரியுதுல … மனம் வருந்திய அமீர்… இனியாவது மாறுவாரா?

சென்னை : பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. இதனால், பிக் பாஸ் ரசிகர்கள் இல்லாதவர்கள் கூட பிக் பாஸ் நிகழ்ச்சியை விரும்பி பார்த்து வருகிறார்கள்.

18 போட்டியாளர்களுடன் தொடங்கி பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது 10 போட்டியாளர்கள் இருக்கிறார்கள்.

சீசன் 5 நிகழ்ச்சியில் யார் வெற்றி பெறுவார்.. யார் 2வது இடத்தை பிடிப்பார் என்பதை காண ரசிகர்கள் ஆவலுடன் இருக்கின்றனர்.

குடும்பங்கள் சந்திப்பு

குடும்பங்கள் சந்திப்பு

அனைவரும் எதிர்பார்த்த குடும்ப சந்திப்பு நிகழ்ச்சி தற்போது ஒளிபரப்பாகி வருகிறது.இதில் முதல் நபராக அக்ஷராவின் அம்மா மற்றும் அண்ணன் வந்திருந்தனர். அவர்களை பார்த்ததும் அக்ஷரா குழந்தையாகவே மாறித்தான் போனார் என்று சொல்ல வேண்டும். இதையடுத்து, ஒவ்வொரு போட்டியாளர்களின் குடும்பத்தினரும் அடுத்தடுத்து வருகை தந்துள்ளனர்.

எனக்கு பிடிக்கல

எனக்கு பிடிக்கல

இதையடுத்து, நேற்றைய எபிசோடில் பாவனியின் அம்மா மற்றும் அக்கா வந்திருந்தனர். பாவனியின் அக்கா வந்ததும் வராததுமாக இந்த வீட்டிற்குள் அனைவரும் உன்னிடம் நடந்து கொள்ளும் விதம் ஒரு மாதிரியாக இருந்தாலும் ஒருவர் மட்டும் உன்னிடம் நடந்து கொள்ளும் விதம் எனக்கு பிடிக்கவில்லை நான் என்ன சொல்ல வரேன்னு உனக்கு புரியும்னு நினைக்கிறேன் என்றார்.

அட்வைஸ்

அட்வைஸ்

அமீர் உன்னிடம் பழகுவது வெளியில் வேறுவிதமாக தெரியுது, அவனிடம் நீ தைரியமாக பேசி விடு என்று பாவனிக்கு சரமாரியான அட்வைஸ்களை கூறினார் பாவனியின் அக்கா. உடனே,இந்த இடத்தில் நான் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று எனக்கு தெரியும். அதனால் தைரியமாக இருங்கள் என்றார்.

மனம் வருந்திய அமீர்

மனம் வருந்திய அமீர்

இதையடுத்து, பாவனியிடம் பேசிய அமீர், அம்மா என்ன சொன்னாங்க என்று கேட்டார், அம்மா ஒன்னும் சொல்லல அக்கா தான், நீ பேசுவது வெளியில் வேறமாதிரி தெரிவதாக சொன்னாங்க என்றார். உடனே அமீர், என்னால உனக்கு தேவையில்லாம் கெட்ட பெயர் ஆகிடுச்சி, எல்லாரும் இதேயே சொல்றாங்க, வெளியில எல்லாமே தப்பா தெரியுது.. நான் தப்பு பன்னிவிட்டேன் என்று மனம் வருந்தி பேசினார்.

பாவனி பின்னால் சுத்தாதீங்க

பாவனி பின்னால் சுத்தாதீங்க

இதைப்பார்த்த நெட்டிசன்ஸ், ரொம்ப கஷ்டப்பட்டு இந்த இடத்திற்கு வந்து இருக்கீங்க, பாவனி பின்னால் சுத்தி கிடைத்த வாய்ப்பை தவறவிட்டு விடாதீர்கள், உங்க விளையாட்டை விளையாடுங்க என்று கருத்துக்களை கூறி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X