பிக்பாஸ் வீட்டுக்குள் 6வது போட்டியாளராக நுழைந்தார் விஜய் டிவி தொகுப்பாளர் பிரியங்கா தேஷ்பாண்டே!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6 வது போட்டியாளராக விஜய் டிவியின் பிரபல தொகுப்பாளரான பிரியங்கா தேஷ்பாண்டே பங்கேற்றுள்ளார்.
Recommended Video
விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி கோலாகலமாக தொடங்கி ஒளிபரப்பாகி வருகிறது. இதுவரை 5 போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டுக்குள் சென்றுள்ளனர்.
முதல் போட்டியாளராக கானா பாடகி இசைவானி, இரண்டாவது போட்டியாளராக ராஜு ஜெயமோகனும், மூன்றாவது போட்டியாளராக ஜெர்மனியை சேர்ந்த ஆடை வடிவமைப்பாளர் மதுமிதா பங்கேற்றார்.

பிரியங்கா தேஷ்பாண்டே
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4வது போட்டியாளராக யூடியூப் விமர்சகர் அபிஷேக் ராஜா பங்கேற்றார். 5வது போட்டியாளராக திருநங்கை நமிதா மாரிமுத்து பிக்பாஸ் வீட்டுக்குள் சென்றார்.
இந்நிலையில் 6வது போட்டியாளராக விஜய் டிவியின் பிரபல தொகுப்பாளரான பிரியங்கா தேஷ்பாண்டே பங்கேற்றுள்ளார்.

பிக்பாஸ் வீட்டுக்குள் என்ட்ரி
கடந்த சில நாட்களாகவே பிரியங்கா தேஷ்பாண்டே பிக்பாஸ் வீட்டுக்குள் செல்கிறார் என தகவல் பரவியது. பின்னர் பிரியங்கா பங்கேற்கவில்லை என்றும் கூறப்பட்டது. இந்நிலையில் 6வது போட்டியாளராக பிக்பாஸ் வீட்டுக்குள் என்ட்ரி கொடுத்துள்ளார் பிரியங்கா தேஷ்பாண்டே.

தனி ரசிகர் பட்டாளம்
பிரியங்கா விஜய் டிவியில் சூப்பர் சிங்கர், ஸ்டார்ட் மியூஸிக் உட்பட பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். நகைச்சுவையாகவும் சுவாரசியமாகவும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் பிரியங்காவுக்கு என்று தனி ரசிகர் பட்டாளம் உள்ளது.

ஹு இஸ் த ஹீரோ
இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள பிரியங்கா, கமலின் மன்மதன் அம்பு படத்தில் இடம்பெற்ற ஹு இஸ் த ஹீரோ ஹு இஸ் த ஹீரோ பாடலை பாடி கலக்கியுள்ளார். ஏற்கனவே சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய போது பல்வேறு பாடல்களை பாடியுள்ளார் பிரியங்கா தேஷ்பாண்டே.

நண்பர்கள் வாழ்த்து
பிக்பாஸ் வீட்டுக்குள் சென்ற பிரியங்காவை விஜய் டிவி தொகுப்பாளரான மாகபா ஆனந்த், பாடகர் பென்னி தயாள், ஆகியோர் வீடியோ மூலம் வாழ்த்து கூறியுள்ளனர். நடிகர் கமல்ஹாசனும் பிரியங்காவுக்கு வாழ்த்து கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











