பியூட்டி... உண்ட மயக்கமா… அக்ஷராவை வெக்கப்பட வைத்த பிக் பாஸ் !
சென்னை : பிக் பாஸ் சீசன்5 நிகழ்ச்சி 75 நாட்களை கடந்து விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.
106 நாட்கள் நடைபெறும் இந்த போட்டி முடிவடைய சரியாக ஒரு மாதமே எஞ்சி உள்ளது.
இந்த சீசனில் டைட்டில் வின்னர் பட்டத்தை யார் தட்டிச்செல்வார் என்ற எதிர்பார்ப்பு பிக் பாஸ் ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

10 பேரும் நாமினேஷன்
வழக்கமாக பிக் பாஸ் வீட்டில் போட்டி வைத்து வாரம் ஒரு தலைவரை தேர்ந்தெடுப்பார்கள். தேர்ந்தெடுக்கும் கேப்டனை யாரும் நாமினேட் செய்ய முடியாது. வழக்கத்திற்கு மாறாக இந்த முறை ஹவுஸ்மெட்டுகள் 10 பேரையும் பிக் பாஸ் நாமினேட் செய்தார்.

நாமினேஷன் லிஸ்ட்
இந்த நாமினேஷனிலிருந்து தப்பிக்காக விதவிதமான டாஸ்க் நடத்தப்பட்டது. இதில் சிறப்பாக செயல்பட்ட நிரூப், சிபி, தாமரை, பாவ்னி, அமீர், ராஜு , ரஞ்சீவ் ஆகியோர் நாமினேஷனிலிருந்து தப்பித்தனர். பிரியங்கா, அபிநய் , வருண் ,அக்ஷரா ஆகியோரின் பெயர் நாமினேஷனில் உள்ளது.

சமையல் டாஸ்க்
இதையடுத்து, பிக் பாஸ் வீட்டில் இன்று சமையல் டாஸ்க் நடைபெற்றது. 40 நிமிடங்களுக்குள் சுவையான வெரைட்டி உணவுகள் சமைக்க வேண்டும். குறைந்த நேரத்திற்குள் அதிக உணவுகளை சமைக்கும் அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும்.

கேஸ் ஸ்டவ் பரிசு
இந்த டாஸ்க்கிற்காக ப்ளு டீம், ரெட் டீம் என இரு அணிகளாக போட்டியாளர்கள் பிரிந்து விதவிதமாக சமைத்தனர். குறைந்த நேரத்தில் சுவையான பல உணவு வகைகளை சமைத்த ப்ளு டீம் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதில் ஜெயித்த அணிக்கு கேஸ் ஸ்டவ் பரிசாக அளிக்கப்பட்டது.

செம கலாய்
பிக் பாஸ் எப்போதுமே ஸ்டிட் ஆபீசர் போலேவே இருப்பார்.... என்ன பேசனுமோ அதை மட்டும் பேசிவிட்டு போய்விடுவார்.. ஆனால் இன்று பிக் பாஸ் கொஞ்சம் சிரித்து பேசினார். சமையல் டாஸ்கின் போது நடுவராக இருந்த ராஜு உணவை ருசிபார்த்துக் கொண்டே இருந்தார். அப்போது பேசிய பிக் பாஸ்,ராஜு நீங்க நடுவர் ருசிபார்த்து சொல்லுங்க, மொத்த சாப்பிட்டு டின்னரை முடித்துவிடாதீங்கனு ராஜுவை கலாய்த்தார்.

உண்ட மயக்கமா
அதேபோல, சமையல் டாஸ்க்கை முடித்துவிட்டு, வயிறுமுட்ட சாப்பிட் அக்ஷரா அசதியில் அப்படியே தூங்கிவிட்டார். இதை கவனித்த பிக் பாஸ் என்ன.. பியூட்டி உண்ட மயக்கமா என கேட்டு அக்ஷராவை வெக்கப்பட வைத்தார். இதைகேட்ட போட்டியாளர்கள் சிரிப்பை அடக்க முடியாமல் சிரித்தனர்.


Click it and Unblock the Notifications











