என்ன பிக்பாஸ்.. இவருக்கு மட்டும் கேக் கொடுக்கல.. அண்ணாசி பழத்தை வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய அபிஷேக்!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சி நேற்று கோலாகலமாக தொடங்கிய நிலையில் முதல் நாளிலேயே அண்ணாசி பழத்தை வெட்டி போட்டியாளர் ஒருவர் பிறந்த நாள் கொண்டாடியுள்ளார்.
Recommended Video
பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி நேற்று ஆட்டம் பாட்டம் என கோலாகலமாக தொடங்கியது. இதில் முன் எப்போதும் இல்லாதபடியாக முதல் நாளிலேயே 18 போட்டியாளர்கள் பங்கேற்றனர்.
ஒவ்வொரு போட்டியாளராக அறிமுகப்படுத்திய நடிகர் கமல்ஹாசன் அவர்களை பிக்பாஸ் வீட்டுக்குள் அனுப்பி வைத்தார்.

பிக்பாஸே கேக் கொடுப்பார்
வீட்டுக்குள் சென்ற முதல் நாளிலேயே யூட்யூபரான அபிஷேக் ராஜா பிறந்த நாளை கொண்டாடினார். வழக்கமாக போட்டியாளர்களுக்கு பிறந்தநாள் என்றால் பிக்பாஸே கேக் கொடுப்பார். ஸ்டோர் ரூம்மில் வைக்கப்படும் கேக்கை சக போட்டியாளர்கள் கொண்டு வர பர்த்டே பேபியான போட்டியாளர் கேக்கை வெட்டி பிறந்த நாளை கொண்டாடுவார்.

அபிஷேக் ராஜாவுக்கு பிறந்தநாள்
ஆனால் அபிஷேக் ராஜாவுக்கு நேற்று பிறந்த நாள் என்பது கமல் வரை தெரிந்திருந்தது. பிக்பாஸ் அறிமுக மேடையிலேயே இன்று உங்களுக்கு பிறந்த நாள் என கேள்வி பட்டேன் என்றார் கமல். அதனைக் கேட்ட அபிஷேக் ராஜா, ஆமாம் சார் நானே உங்களிடம் வாழ்த்தை கேட்டு பெறலாம் என்று நினைத்தேன்.. எனக்கூறி தனது நன்றியை தெரிவித்தார்.

கடைசி வரை கேக் வரும்
பிக்பாஸ் வீட்டுக்குள் சென்றதும் சக போட்டியாளர்களிடம் தனக்கு இன்று பிறந்த நாள் என்று கூறினார் அபிஷேக் ராஜா. இதனால் சக போட்டியாளர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். கடைசி வரை கேக் வரும் என காத்திருந்தார் அபிஷேக் ராஜா.

அண்ணாசி பழத்தை வெட்டி
ஆனால் கேக் வராததால் இமான் அண்ணாச்சியின் அறிவுரைப்படி அண்ணாசி பழத்தை வெட்டி பிறந்த நாளை கொண்டாடினார். இதனை பார்த்த ரசிகர்கள் என்ன பிக்பாஸ் அபிஷேக் ராஜாவுக்கு கேக் அனுப்பவில்லையா என கேட்டு வருகின்றனர். பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்ற முதல் நாளே கவின் பிறந்தநாளை கொண்டாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











