ஓவர் ஆக்டிங்... ஆத்திரத்தில் சிபியை அசிங்கப்படுத்த முயன்ற அக்ஷரா !
சென்னை : பிக் பாஸ் நிகழ்ச்சி 54 நாட்களை கடந்து சண்டை சச்சரவுக்கு பஞ்சமில்லாமல் சென்று கொண்டிருக்கிறது.
இதில் கனா காணும் காலங்கள் டாஸ்கில், வருண், தாமரை, இமான், நிருப், பாவ்வி, ஐக்கி, அக்ஷரா, பிரியங்கா ஆகியோர் பள்ளி மாணவர்களான இருந்தனர். அவர்கள் செய்த சேட்டைகள் ரசிக்கும் படி இருந்தது.
சிபி வார்டனாகவும், ராஜூ, அபிஷேக் ஆசிரியர்களாகவும், மற்ற போட்டியாளர்கள் மாணவர்களாகவும் விளையாடினர்.

சிபி வார்டன்
இந்த டாஸ்கில் வார்டனாக இருந்த சிபி பலரிடம் கடுமையான நடந்து கொண்டார். பள்ளிக்கூடத்திற்கு வரவேண்டும் என்றால், தலைமுடியை கருப்பாக்க வேண்டும் என்று அக்ஷரா மற்றும் ஐக்கி இடம் கூறினார் சிபி , இதையடுத்து, இருவரும் வேறு வழியில்லாமல் டாஸ்கிற்காக தலைமுடியின் நிறத்தை மாற்றினர்.

அக்ஷரா அழுகை
வார்டனாக இருக்கும் சிபி எல்லை மீறி பேசுகிறார் என சொல்லி அக்ஷரா சண்டை போட்டார். பொருட்களை தூக்கி போட்டு உடைத்தார். சண்டை பெரிய அளவில் நடந்த நிலையில் பிக் பாஸ் அழைத்து பேசினார். அதன் பிறகும் அக்ஷரா டாஸ்கில் கலந்து கொள்ளாமல் நீண்ட நேரம் கண்ணீர் விட்டுக் கொண்டிருந்தார்.

மீண்டும் சண்டை
இந்நிலையில் இன்று போட்டியாளர்கள் யார் சிறப்பாக டாஸ்க் செய்யவில்லை என தேர்ந்தெடுத்து சொல்லும்படி பிக் பாஸ் கூறினார். அப்போது சிபி, அக்ஷரா இந்த டாஸ்கை சரியாக செய்யவில்லை என்று கூற, இருவரும் இடையே மீண்டும் சண்டை நடந்தது .

டாஸ்க் புரியல
என்ன குறை சொல்லாதீங்க, நீ ஓவரா ஆக்டிங் என அக்ஷரா சிபி மீது குறைகூறினார். உடனே, சிபி, உனக்குத்தான் டாஸ்க் என்னவென்றே புரியாமல் அழுதுகொண்டு இருந்த என கூறினார். மேலும், சுட்டி குழந்தை என்பதற்கு அர்த்தம் தெரியுமா தெரியாதா என தெரியவில்லை என மோசமான டாஸ்கில் விளையாடியது அக்ஷரா என்றார் சிபி.

அடிக்கடி சண்டை
பொம்மை டாஸ்கில் இருவருக்கும் இடையே மியூட் போடும் அளவுக்கு கெட்டவார்த்தையில் ஒருவரை ஒருவர் திட்டிக்கொண்டனர். அப்போதில் இருந்தே சிபி எது கூறினாரும் அக்ஷரா பேய்யாட்டம் ஆடுவார். அவரை வார்டனாக போட்டதால் கடுப்பான அக்ஷரா டாஸ்குதானே என்று நினைக்காமல் வரம்பு மீறி நடந்து கொண்டார்.


Click it and Unblock the Notifications











