ஒரு மானமில்லை.. அதில் ஈனமில்லை.. எப்போதும் வால் பிடிப்பார்.. பாட்டுப்பாடி அபிஷேக்கை நக்கலடித்த சிபி !
சென்னை : பிக் பாஸ் பிரேக்கிங் நியூஸ் நிகழ்ச்சி வீட்டிற்குள் அரங்கேறியது. கடந்த இரண்டு நாட்களாக ஹவுஸ்மேட்ஸ் இந்த விளையாட்டை விளையாட்டி வருகின்றது.
மூன்றாவது நாளான இன்று சிபியும், அபிஷேக்கும் நிகழ்ச்சியை நடத்த, ப்ரியங்கா ரிப்போர்ட்டராக செயல்பட்டார். வருண், தாமரைச் செல்வியை வைத்து பஞ்சாயத்து செய்து கொண்டிருக்கும்போது கோபம் அடையும் சிபி, பேபரை கிழித்துப்போட்டு போட்டார்.
தாமரையிடம் இந்த மாதிரியான கேள்வியை எல்லாம் நீங்க கேளுங்க நான் கேட்கமாட்டேன் என்றார். ஏன் கேட்க மாட்ட, இது டாஸ்க் நீ கேட்டுத்தான் அகனும் பிரியங்கா கூறினார். இப்படி, ரெட் டிவி நிகழ்ச்சியின் போதே சண்டை ஏற்பட்டு நிகழ்ச்சியை நிறுத்தினார்கள்.

பிரியங்கா கிண்டல்
இதையடுத்து, பிரியங்கா , சிபியிடம், தாமரை உன்னை செல்ல பிள்ளை, தங்கப்பிள்ளை என்பதால் இந்த கேள்வியை கேட்க மாட்டியா என்று தாமரையை கிண்டல் செய்வது போல பேசினார். இதனால்,கடுப்பான தாமரை எரிமலைப்போல வெடித்தார். கொஞ்ச நேரத்தில் வீடே ரணகளமானது. இதையடுத்து,சஞ்சீப் சைலன்ஸ்னு ஒரு அதட்டு அதட்டினார்.

சரியான போட்டி
ஒருவழியாக பிரச்சினை ஓய்ந்து ரெட் டிவி நிகழ்ச்சியைத் தொடங்கியது. அப்போது, ஒரு திரைப்பட பாடல் ஒளிபரப்பப்படும்,அந்த கதாபாத்திரத்தை போல வீட்டில் யார் இருக்கிறார் என்று கூற வேண்டும் என்றார் அபிஷேக் கூறினார். உடனே, சிபி நான் பாட்டு பாடுறேன் அது யாருனு சொல்லுங்க என்றார்.

வால் பிடிப்பார்
நான் ஆணையிட்டால் பாடலில் வரும் வரியான, சிலர் ஆசைக்கும்... தேவைக்கும், வாழ்வுக்கும்,வசதிக்கும், ஊரார் கால் பிடிப்பார்... ஒரு மானமில்லை, அதில் ஈனமில்லை.. அவர் எப்போதும் வால் பிடிப்பார் என்று பாடினார். இந்த பாடலை சிபி பாடி முடிப்பதற்குள், ராஜு இப்படிஇருப்பது அபிஷேக் என்றார்.உடனே அபிஷேக், வம்பை விலைக்கு வாங்கும் வயசுடா என எதிர் பாட்டுப்பாடினார். இப்படியே மாறி மாறி பாட்டுப்பாடினர்.

ப்ராங்க
இதையடுத்து, நிகழ்ச்சியை முடித்த ரெட் டிவி, தாமரை உடனான சண்டை ஒரு ப்ராங்க் என்று கூறினார்.நான், அபிஷேக், சிபி மூவரும் பேசி வைத்துக்கொண்டு செய்தோம்., தாமரைப்பற்றி பேசினால் அவர் நிச்சயம் கோவப்படுவார் அது தெரிந்து தான் இப்படி ப்ராங்க் செய்தோம் என்று கூறினர். இதையடுத்து, நடுவரான சஞ்சீவ் ரெட்ட டிவிக்கு தனது பாராட்டை தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications











