பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்த மாஸ்டர் பட நடிகர்… யாருன்னு பாருங்க !

சென்னை : பிக் பாஸ் சீசன் 5ல் 17 வது போட்டியாளராக நடிகர் சிபி சந்திரன் நுழைந்துள்ளார்.

Recommended Video

Bigg Boss 5 Contestant Madhumitha Biography | Kamal Hassan, BB 5 Grand Launch

கானா பாடகி, நாட்டுப்புற பாடகி, ராப் பாடகி, நடிகர், நடிகைகள் என ஒவ்வொருவரும் ஒவ்வொரு துறையை சேர்ந்தவர்களாக இருக்கின்றனர்.

பிக் பாஸ் இல்லத்தில் இதுவரை 16 போட்டியாளர்கள் நுழைந்துள்ளனர். 17வது போட்டியாளராக சிபி சந்திரன் நுழைந்துள்ளார்.

சிபி சந்திரன்

சிபி சந்திரன்

நடிகர் சிபிசந்திரன், 2018ம் ஆண்டு வெளியான வஞ்சகர் உலகம் என்ற திரைப்படத்தின் மூலம் தனது அறிமுகத்தை கொடுத்துள்ளார். அந்த திரைப்படத்தில் குரு சோமசுந்தரம் மற்றும் சாந்தினி தமிழரசன் ஆகியோர் நடித்துள்ளார்.

மாஸ்டர்

மாஸ்டர்

இந்த திரைப்படத்தை அடுத்து, சிபி சந்திரன் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாஸ்டர் திரைப்படத்தில் விஜய்யின் மாணவனான நடித்திருப்பார். அந்த திரைப்படத்தை அடுத்து தற்போது இவர், பாண்டியராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தில் நடித்துள்ளார்.

17வது போட்டியாளர்

17வது போட்டியாளர்

பிக் பாஸ் இல்லத்தில் 17வது போட்டியாளராக நுழைந்துள்ளார் சிபி சந்திரனை நேயர்களுக்கு கமல் அறிமுகப்படுத்தினார். அப்போது பேசிய சிபி, நான் திருநெல்வேலியில் பிறந்து வளர்ந்தவன். லண்டனில் நல்ல சம்பளத்தில் கிடைத்த வேலையை விட்டுவிட்டு சினிமாவில் நுழைந்தேன். வஞ்சகம் உலகம் படத்தில் நடித்தேன் என்றார்.

எல்லாமே சினிமா தான்

எல்லாமே சினிமா தான்

லோகேஷ் கனகராஜ் எனக்கு மிகப்பெரியவாய்ப்பை கொடுத்தார். எனக்கு எல்லாமே சினிமா தான். பிக் பாஸ் வீட்டில் , நான் நானாக இருக்க விரும்புகிறேன். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முக்கிய காரணம் ஒரு நல்ல வாய்ப்பு கிடைக்கும் என்று நம்புகிறேன் என்றார். பிக் பாஸ் வீட்டில் நுழைந்த அவரை மற்ற போட்டியாளர்கள் மகிழ்ச்சியோடு வரவேற்றனர்.

18 போட்டியாளர்கள்

18 போட்டியாளர்கள்

இதுவரை நடந்து முடிந்த 4 சீசன்களிலும் ஆண் போட்டியாளர்களுக்கு இணையாக பெண் போட்டியாளர்கள் இடம்பெற்று இருந்தனர். ஆனால் இந்த சீசனில் 7 ஆண் போட்டியாளர்கள், 10 பெண் போட்டியாளர்கள், ஒரு திருநங்கை என மொத்தம் 18 போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X