போட்டியாளர்களை மாட்டுசாணி அள்ளவிட்ட பிக் பாஸ்.. ப்ளீஸ் போதும்... முடியல.. கதறிய அமீர்!
சென்னை : பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி முக்கால்வாசி கிணறை தாண்டி விட்டது. இதனால் நாளுக்கு நாள் பிக் பாஸ் வீட்டில் சுவாரசியம் கூடிக்கொண்டே போகிறது.
இன்றை ய எபிசோடுக்கான 2வது ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதில் தாமரை, அமீர், அபிநய் ஆகியோர் மாட்டு சாணம் அள்ளுகின்றனர்.
கலர் கலரா ட்ரஸ் போட்டுக்கொண்டு, நுனி நாக்கு ஆங்கிலம் பேசியவர்களை கடைசியில் சாணி அள்ள விட்டுவிட்டதாக ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.

பேருந்து டாஸ்க்
இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் கேப்டனாக யாரும் தேர்ந்தெடுக்கப் படாததால் பிக் பாஸ் ஹவுஸ்மேட்ஸ் அனைவரும் இந்த வாரம் நாமினேட்டாகி இருக்கின்றனர். இதில் நாமினேஷலிருந்து தப்பித்துகொள்ள போட்டி நடைபெற்றது. இதில் பஸ் டாஸ்கில் ஒருவர் ஒருவராக வெளியேற இறுதியில் நிரூப் இறுதிவரை இருந்து நாமினேஷனிலிருந்து தப்பித்தார்.

நாமினேஷனிலிருந்து தப்பிக்க
இதையடுத்து,நாமினேஷனிலிருந்து தப்பிக்க பகடை டாஸ் கொடுக்கப்பட்டது. அதில், பகடைக்காய் போன்ற செட் அப்பில் பிக் பாஸ் போட்டியாளர்களில் புகைப்படங்கள் ஒட்டப்பட்டிருக்கிறது. மூன்று முறை பெல் அடித்து முடிக்கும்போது யாருடைய புகைப்படம் வானத்தைப் பார்த்து இருக்கிறதோ, அவரை அந்த பகடைக்காயில் இருந்து கீழே தள்ளிவிட வேண்டும்.

அக்ஷரா பிரியங்கா மோதல்
முதல் ரவுண்டில், ராஜூவின் பெயர் வந்ததால், அவர் அந்த பகடையின் மீது ஏறி அமர்ந்து கொண்டார். இதனால், அக்ஷரா அவரிடம் வாக்குவாதம் செய்தார். அப்போது நடுவராக இருந்த பிரியங்கா அக்ஷரா இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து, இருவரும் கண்டபடி ஒருவரை ஒருவர் திட்டிக்கொண்டனர்.

2வது ப்ரோமோ
இதையடுத்து, இன்றைய எபிசோடுக்கான 2வது ப்ரோமோ வெளியாகி உள்ளது. இதில், ஒரு தொட்டியில் மாட்டு சாணம் கலந்து வைக்கப்பட்டுள்ளது. அந்த சாணத்தில் உள்ள காயினை போட்டியாளர்கள் தேடி கண்டுபிடித்து எடுக்க வேண்டும். அந்த டாஸ்கில் தாமரை, அமீர், அபிநய் ஆகியோர் கலந்து கொண்டனர்.

ப்ளீஸ் பிக் பாஸ்
கிராமத்து பெண் என்பதால் தாமரைக்கு இந்த டாஸ்க் ஈஸியாக இருக்கும். ஆனால், அமீர் மற்றும் அபிநய் முகத்தை சுளித்துக்கொண்டு இந்த போட்டியில் செய்கின்றனர். சாணியில் நாணயத்தை தேடி கடுப்பான அமீர், போதும் பிக் பாஸ் வேண்டாம் என்று கெஞ்சுகிறார். இன்று என்ன சுவாரசியம் நடக்கிறது என்று பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











