சஞ்ஜீவ் மகள் ஆசை நிறைவேறியது.. இதற்காக தான் பிக் பாஸ் வந்தாரா? லேட்டஸ்ட் ப்ரோமோ !

சென்னை : விஜய் தொலைக்காட்சியில் பிக் பாஸ் நிகழ்ச்சி யின் 5வது சீசன் தொடங்கி வெற்றிகரமாக 82வது நாளை எட்டியுள்ளது.

இறுதிக்கட்டத்தை நோக்கி செல்லும் இந்த நிகழ்ச்சியில் தற்போது பிரியங்கா, ராஜு, பாவ்னி, வருண், அக்‌ஷரா, தாமரை செல்வி, சிபி, நிரூப், சஞ்ஜீவ் மற்றும் அமீர் ஆகிய 10 போட்டியாளர்கள் உள்ளனர்.

இந்நிலையில், இன்றைய எபிசோடுக்கான 3வது ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதில் சஞ்ஜீவின் மனைவி மற்றும் குழந்தைகள் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்துள்ளார்கள்.

குடும்பத்தினர் சந்திப்பு

குடும்பத்தினர் சந்திப்பு

பிக் பாஸ் வீட்டிற்கு போட்டியாளர்களின் குடும்பத்தினர் வருகை புரிந்த வண்ணம் உள்ளனர். பல வாரங்கள் கழித்து தங்கள் குடும்பத்தினரை சந்திக்கும் போட்டியாளர்கள் மிகுந்த உணர்ச்சிவசப்படுகின்றனர். இதில் போட்டியாளர்களின் குடும்பத்தினர் ஒவ்வொருவராக உள்ளே வந்த வண்ணம் உள்ளனர்.

3வது ப்ரோமோ

3வது ப்ரோமோ

இந்நிலையில் தற்போது வெளியாகி உள்ள 3வது ப்ரோமோவில் சஞ்ஜீவின் குடும்பத்தினர் வந்திருக்கிறார்கள். அவரது மனைவி சீரியல் நடிகை ப்ரீத்தி, மகள் மற்றும் மகன் என மொத்த குடும்பமும் வந்திருக்கிறது. பாடல் கேட்டதுமே சஞ்ஜீவ் கண்களில் கண்ணீர் வழிய ஆரம்பித்துவிட்டது. அதன் பின் அவர் குழந்தைகளை கட்டியணைத்துக்கொண்டார்.

மகளின் ஆசை

மகளின் ஆசை

"இப்போது மகிழ்ச்சியா? உள்ளே வர வேண்டும் என நீ தான் ஆசைபட்டாயே" என ஆங்கிலத்தில் மகளை பார்த்து கேட்கிறார் சஞ்ஜீவ். மகளது இந்த ஆசையை நிறைவேற்றதான் சஞ்சீவ் பிக் பாஸ் வீட்டுக்குள் வைல்டு கார்டு என்ட்ரியாக வந்தாரோ? என ரசிகர்கள் கேட்டுள்ளனர்.

Recommended Video

Bigg Boss Sanjeev-க்கு Vote போடும் Thalapathy Vijay | Preethi Sanjeev
ஆசை நிறைவேறியது.

ஆசை நிறைவேறியது.

நாமினேஷனிலிருந்து தப்பிப்பதற்காக நடந்த டாஸ்கின் போது கூட சஞ்ஜீவ் ராஜூவிடம், என் குடும்பம் பிக் பாஸ் வீட்டிற்கு வரவேண்டும் அதற்காக நான் எமினேட் ஆகாமல் இங்கே இருக்க வேண்டும் இது என் குடும்பத்தின் ஆசை என கூறியிருந்தார்.அந்த ஆசை இன்று நிறைவேறி உள்ளது. '

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X