Don't Miss!
- News
முஸ்லிம்கள் மீது வன்முறை; இந்து பிரபாகரன், கோட்சே மகாத்மா- வட இந்திய சாமியார்கள் மாநாடு-ப்ளாஷ்பேக்
- Finance
கேட்பரீஸ் சாக்லேட்டில் புழுக்கள்: ரூ.50 லட்சம் நஷ்ட ஈடு கேட்டவருக்கு கிடைத்த தீர்ப்பு என்ன தெரியுமா?
- Lifestyle
Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்களின் பணிச்சுமை சற்று அதிகமாக இருக்கும்...
- Sports
ஒரே ஓவரில் மாறிய விதி.. ஹாசல்வுட் செய்த கடைசி நேர மேஜிக்.. ஆர்சிபி அணி அபார வெற்றி பெற்றது எப்படி?
- Automobiles
ஒரே நாளில் இத்தனை பேருக்கு அபராதமா? தமிழக காவல் துறை அதிரடி... காரணம் தெரிஞ்சா இனி இந்த தப்பை பண்ண மாட்டீங்க!
- Technology
16எம்பி ரியர் கேமரா, 5000 எம்ஏஎச் பேட்டரியுடன் மோட்டோ இ32எஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்.!
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
நேரடியாக பைனலுக்கு செல்லும் போட்டியாளர் யார் ?.. முடிவெடுக்க முடியாமல் குழம்பும் ஹவுஸ்மெட்ஸ் !
சென்னை : பிக் பாஸ் சீசன் 5நிகழ்ச்சி இறுதிகட்டத்தை நெருங்க நெருங்க யார் டைட்டில் வின்னராக போகிறார் என்ற எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
அது மட்டும் இந்த வாரம் நாமினேஷனில் யார் வெளியேறப்போகிறார்கள் என்பதை தெரிந்து கொள்ள ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் இருக்கின்றனர்.
தற்போது இன்றைய எபிசோடுக்கான முதல் 2வது ப்ரோமோ வெளியாகி உள்ளது. இதில் வழக்கம் போல நிரூப் காரசாரமாக வாக்குவாதம் செய்கிறார்.
19வது சென்னை சர்வதேச திரைப்பட விழா... சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் படத்திற்கு விருது

பிக் பாஸ் சீசன் 5
பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் ஒரு போட்டியாளர்கள் வெளியேறி கொண்டிருந்தாலும் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் 6 போட்டியாளர்கள் மட்டுமே மீதம் இருக்கின்றனர். ஆரம்பத்தில் 18 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் இருந்தனர். இதையடுத்து, இரண்டு போட்டியாளர்கள் வைல்ட் கார்ட் என்ட்ரியாக வீட்டிற்குள் வந்தனர்.

சிபி வெளியேறினார்
தற்போது பிக் பாஸ் வீட்டில் நிரூப், அமீர், ராஜு, தாமரை, பிரியங்கா, பாவனி என 6 பேர் மட்டுமே உள்ளார். டிக்கெட்டு ஃபினாலே டாஸ்கில் சூப்பராக விளையாடிய சிபி நேற்றைய எபிசோடில் 12 லட்சம் ரூபாய் பணத்துடன் வெளியேறிவிட்டார். இதனால் இந்த வாரம் யார் வெளியேறுவா, பைனாலுக்கு யார் போவார்கள் என்பது யூகிக்க முடியாதபடி உள்ளது.

புது ட்விஸ்ட்
இதையடுத்து, பிக் இன்று ஒரு புது ட்விஸ்ட்டை வைத்துள்ளார். அதில், உலகத்தோட பார்வையில் தன்னுடைய முகத்தை வெற்றிகரமாக மறைத்திருக்கிறார். ஆனால் அவருடைய உண்மையான முகத்தை கண்டுபிடித்து விட்டோம் அதை துடைத்து சுத்தம் செய்து நேரடியாக இறுதி வாரத்திற்கு அனுப்பலாம் என கூறியிருந்தார்.

2வது ப்ரோமோ
இதையடுத்து, தற்போது வெளியாகி உள்ள 2வது ப்ரோமோவில் யாரை தேர்வு செய்து போட்டியாளர்கள் பேச்சுவார்த்தை நடத்திவருகின்றனர். அதில் வழக்கம் போல நிரூப் எப்படியாவது பைனாலுக்கு போய்விடவேண்டும் என்ற ஆர்வத்தில் மூச்சைபிடித்துக்கொண்டு பேசுகிறார். ஆனால், அமீர், என்னடா இத்தனை விளையாட்ட கேமையை தலைகீழா மாத்துர என்று கூறியுள்ளார்.

தாமரைக்கு வாய்ப்பு
அனைத்து போட்டியாளர்களும் யாரை இரண்டாவதாக பைனலுக்கு அனுப்பி வைப்பது என்பது குறித்து தீவிர ஆலோசனை செய்து வருகின்றனர். என்னத்தான் மூச்சை பிடித்துக்கொண்டு நிரூப் பேசினாலும், அவரை யாரும் அனுப்ப முன்வர மாட்டார்கள். அதே போல ராஜுமற்றும் பிரியங்காவுக்கு மக்கள் செல்வாக்கு இருக்கிறது. இதனால், தாமரை இரண்டாவது பைனலுக்கு செல்ல அதிக வாய்ப்பு உள்ளது .