இந்த சீசன் காதல் புறா.. பாவனி அமீருக்கு மலர்ந்த காதல்.. பச்சைக்கொடி காட்டிய பாவனி !

சென்னை : பிக்பாஸ் சீசன் 5ன் 75 வது நாளில் நாமினேஷனில் இருந்து தங்களை காப்பாற்றிக் கொள்வதற்காக போட்டியாளர்களுக்கு டாஸ்க்கள் நடத்தப்பட்டது.

இதற்காக நடத்தப்பட்ட டாஸ்கில் பிரியங்கா, அபிநய், ராஜு,சஞ்சீவ்,அக்ஷரா, வருண், அமீர், பாவ்னி கலந்து கொண்டனர்.

இதில், காதலிப்பதாக பின்னால் சுற்றி வரும் அமீரை பாவனி கண்டிப்பார் என்று பார்த்தால், நாமினேஷனிலிருந்து அவரை காப்பாற்றி சூசகமாக லவ்வுக்கு பச்சைக்கொடி காட்டி உள்ளார் என்று நெட்டிசன்ஸ் கருத்து கூறி வருகின்றனர்.

பிக் பாஸ் சீசன் 5

பிக் பாஸ் சீசன் 5

பிக் பாஸ் வீட்டில் இந்த வாரம் கேப்டனாக யாரும் தேர்ந்தெடுக்கப்படாததால் பிக் பாஸ் ஹவுஸ்மேட்ஸ் அனைவரும் இந்த வாரம் நாமினேட்டாகி இருக்கின்றனர். இதையடுத்து நாமினேஷனிலிருந்து தப்பிக்க விதவிதமாக டாஸ்க் நடத்தப்பட்டது. அதில் வெற்றி பெற்ற தாமரை, சிபி, நிரூப் ஆகியோர் நாமினேஷனில் இருந்து தப்பித்து இருக்கின்றனர்.

ஜோடி டாஸ்க்

ஜோடி டாஸ்க்

இதையடுத்து, இன்றும் நாமினேஷனிலிருந்து தப்பிப்பதற்கான டாஸ்க் நடைபெற்றது. இந்த டாஸ்கிற்காக பிரியங்கா அபிநய் ஒரு ஜோடியாகவும், அமீர் பாவனி ஒரு ஜோடியாகவும், வருண் , அக்ஷரா ஒரு ஜோடியாகவும், ராஜு மற்றும் சஞ்சீவ் ஒரு ஜோடியாகவும் இருந்தனர்.

ஜோடி டாஸ்க்

ஜோடி டாஸ்க்

இந்த டாஸ்கிற்காக ஆக்டிவிட்டி ஏரியாவில் இரு கண்ணாடி கூண்டுகள் அமைக்கப்பட்டு இருந்தன. அந்த கூண்டுக்குள் அமர்ந்து, இந்த நிகழ்ச்சியில் தொடர்ந்து இருக்க நினைக்கும் புகைப்படத்தை காட்ட வேண்டும் இருவரும் ஒரே படத்தை காட்டினால் நாமினேஷனிலிருந்து தப்பிப்பார்கள். இருவரும் வேறு வேறு புகைப்படத்தை காட்டினால் நாமினேஷனிலிருந்து தப்பிக்க முடியாது.

அமீரை காப்பாற்றி பாவனி

அமீரை காப்பாற்றி பாவனி

இந்த டாஸ்கில் அமீர், தன்னுடைய புகைப்படத்தை காட்டி, பாவனியும் நிச்சயமாக என் புகைப்படத்தைத்தான் காட்டுவாங்கனு எனக்கு தெரியும் என்றார். அமீர் நினைத்தது போல பாவனி அமீரின் புகைப்படத்தை காட்டினார். இதனால் அமீர் நாமினேஷனிலிருந்து தப்பித்தார்.

முத்திபோன லவ்

முத்திபோன லவ்

பிக் பாஸ் வீட்டிற்கு வந்ததில் இருந்தே பாவனியின் ஃபேன் நான், எனக்கு பாவனியை பிடிக்கும் என்று கூறி வந்த அமீர், அவர் பின்னால் குட்டிபோட்ட பூனைபோல அலைந்து கொண்டு இருந்தார். ஆனால், கடந்த சில நாட்களாக காதல் முத்திப்போச்சுனு சொல்லும் அளவுக்கு பாவனியிடம் தனது காதலை நேரடியாகவே கூறி விட்டார் அமீர்.

பச்சைகொடி காட்டிய பாவனி

பச்சைகொடி காட்டிய பாவனி

இப்படி பேசாதே... தம்பிடா நீ என்று கூறி சிரித்து சிரித்து மழுப்பி வந்த பாவனி இந்த டாஸ்கின் மூலம் சூசகமாக அமீருக்கு பச்சை கொடிகாட்டி உள்ளார் என்று நெட்டிசன்ஸ் கருத்து கூறி வருகின்றனர். மேலும், இவர்கள் இருவரின் ரொமான்ஸ் பார்க்கவே கடுப்பாக இருக்கு பாவனி சீக்கிரம் வெளியில அனுப்புங்கப்பா என்று நெட்டிசன்ஸ் கருத்து கூறி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X