ஏய் கீய்ன்னு எல்லாம் கூப்பிடாத.. நிரூப், பிரியங்கா சண்டையால் ரணகளமான பிக் பாஸ் வீடு!
சென்னை : பிக் பாஸ் நிகழ்ச்சி 78 நாட்களை விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி உள்ளது.
இந்த நிகழ்ச்சியிலிருந்து நேற்று அபிநய் வெளியேற்றப்பட்டார்.
இதையடுத்து, பிக் பிக் பாஸ் வீட்டில், ராஜூ, சஞ்சீவ்,சிபி, நிரூப் , அமீர், வருண், தாமரை, பாவனி, பிரியங்கா, அக்ஷரா என 10 பேர் மட்டுமே உள்ளனர்.

பிக் பாஸ் சீசன் 5
பிக் பாஸ் வீட்டில் இந்த வார தலைவரை தேர்ந்தெடுக்கும் உட்ராதீங்க எப்போவ் டாஸ்க் எனவழங்கப்படுகிறது. அதன்படி கொடுக்கப்பட்ட கயிறை கடைசி வரை விடாமல் பிடித்திருப்பவரே இந்த வார தலைவராக தகுதி ஆனவர் என அறிவிக்கிறார் பிக் பாஸ்.

தாமரையிடம் சண்டை
இதையடுத்து, போட்டியாளர்கள் அனைவரும் கயிற்றை விடாமல் பிடித்துக்கொண்டே இருந்தனர். அப்போது , தாமரை கயிறை ஒன்றை கையில் பிடித்துக்கொண்டே பாத் ரூமிற்குள் சென்றார். உடனே நிரூப், நீ பாத்ரூமிற்குள் சென்று கயிற்றை விட்டுவிட்டால் எங்களுக்கு எப்படி தெரியும் என்று கூறி பிரச்சினை கிளப்பினார். உடனே, தாமரை என் குழந்தைகள் மீது சத்தியமா நான் கயிற்றை விடவே இல்லை என்று கூறினார். இதனால் நிரூப் மற்றும் தாமரை இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

கயிறு இழுக்கும் போட்டி
கயிற்றை கையில் வைத்துக்கொண்டே சாப்பிடுவது, ரெஸ்ட் ரூம் போவதுமாக இருந்தால் கேமை முடிக்க முடியாது எனவே யாரும் எங்கேயும் போகக்கூடாது என்ற முடிவை எடுத்தனர். இதையடுத்து, நிரூப் கயிறை இழுத்தார். அப்போது பிரியங்கா இது கயிறு இழுக்கும் போட்டி இல்லை, கடைசி வரை கயிறு யார் கையில் இருக்கிறதோ அவர் தான் தலைவர் என்பதற்கான போட்டி என்று கூறினார்.

கேவலமாக விளையாட மாட்டேன்
அப்போதும், நிரூப் கயிற்றை விடாமல் இழுத்துக்கொண்டே இருந்தார். இதனால் கடுப்பான பிரியங்கா த்தூ.. இப்படி எல்லாம் நான் கேவலமாக விளையாட மாட்டேன் என்று கூறி கயிற்றை விட்டு போட்டியிலிருந்து விலகி விட்டார். இதையடுத்து, நிரூப் தாமரையிடம் கயிறை விட்டுவிடு இந்த வாரம் நான் தலைவராகிறேன் என்று கூறினார்.

எனக்கு பேர் இருக்கு
உடனே பிரியங்கா , தாமரை கயிற்றை விட்டுவிடாதே என்று கூற கடுப்பான நிரூப் ஏய் பிரியங்கா உன் வேலையை பாரு, தேவை இல்லாமல் இதில் மூக்கை நுழைக்காதே என்ற கத்தினார். இறுதியில் பிரியங்கா 'ஏய் கீய்ன்னு எல்லாம் கூப்பிடாத, பேர் இருக்கு, பிரியங்கான்னு கூப்பிடு என்றார் இதனால் வீட்டில் காரசார வாக்கு வாதம் நடந்தது.


Click it and Unblock the Notifications











