என் மனசுல ஒண்ணுமில்ல.. உன்னை ஃபிரெண்டாதான் பார்க்கிறேன்.. ஒரே போடு போட்ட பவானி!
சென்னை : பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் தற்போது ஹாட் டாப்பிங்காக இருப்பது பாவனி அமீர் விவகாரம் தான்.
பாவனிக்கும் அமீருக்கும் இடையில் இருப்பது நட்பா காதலா என்று பட்டிமன்றம் வைக்கும் அளவுக்கு சர்ச்சைகள் நாளுக்கு நாள் போய்க்கொண்டு இருக்கிறது.
ஆனால், அமீர் விஷயத்தில் பாவனி நிதானத்துடனே கையாண்டு வருகிறார்.

அட்வைஸ்
பாவனியின் அக்கா நேற்று வீட்டிற்கு வந்து அட்வைஸ் மழை பொழிந்தார். அப்போதும் அமீரைப்பற்றி குறையேதும் சொல்லாமல் நான் பார்த்துக்கொள்கிறேன் என்று அழுத்தமாக சொல்லி அவர்களை சமாதனப்படுத்தினார்.

சங்கடமா இருக்கு
இதையடுதது, அமீர் பாவனி உரையாடலின் போது ஏன் வரவங்க எல்லாம் இதையே பேசறாங்க? என்று அமீர் சங்கடத்துடன் கேட்க இதைத்தான் அதிகம் காட்டறாங்களோ.. என்னமோ?" என்றார் பாவனி. அமீர் விவகாரத்தைப் பாவனி கையாளும் முறை மிகவும் முதிர்ச்சியானதாக இருக்கிறது.

நல்ல பெயர்
பாவனிடம் பலரும் வந்த அமீரை பற்றி சொன்ன போதும் கோபப்படாமல் நிதானமாக இந்த விஷயத்தை கையாண்டுள்ளார். உடனே அமீர் மேல் கோபப்பட்டு முற்றிலுமாக அவருடன் நட்பை துண்டித்து இருந்தால், மக்கள் மத்தியில் நல்ல பெயர் எடுத்திருப்பார் பாவனி.

மனசுல ஒண்ணுமில்ல
நேற்றைய எபிசோடில் கூட பாவனி, அமீரிடம் உன்கிட்ட நான் நிறைய பேசணும், நாம ஏன் நல்ல நண்பர்களாக இருக்கக்கூடாது என்று கேட்டார். என் மனசுல ஒண்ணுமில்ல. உன்னை இன்னமும் ஃபிரெண்டாதான் பார்க்கிறேன் என்று அமீரிடம் திரும்ப திரும்ப கூறி வருகிறார் பாவனி.
Recommended Video

ப்ரீயாஇருங்கா
இதற்கு அமீர், ஏன் இதையே பேசுறா, ப்ரீயா இரு, நான் இந்த வீட்டிற்கு
வந்த நான்காவது நாளில் இருந்த இப்படித்தான் பேசிக்கிட்டு இருக்கேன் இது உனக்கு கஷ்டமா இருந்த சொல்லிடு இனி அப்படி பேச மாட்டேன் என்று கூறுகிறார். உடனே பாவனி இல்லடா நீ பீல்ஆன அதான் என்றார். பாவனி தன் நிலையில் சரியாகத்தான் இருக்கிறார். ஆனால், அமீர் தான் அவர் மீது காதலை வளர்த்துக் கொண்டு இருக்கிறார். பொருத்து இருந்து என்ன நடக்கிறது என்று பார்ப்போம்.


Click it and Unblock the Notifications











