நேர்மையாக விளையாடுற.. அப்படியே ஒரு மாதிரி கூஸ்பம்ஸ் ஆயிடுச்சு.. கணவரை புகழ்ந்த ப்ரீத்தி!
சென்னை : பிக் பாஸ் சீசன் 5 இறுதிக்கட்டத்தை நோக்கி செல்லும் இந்த நிகழ்ச்சியில் தற்போது பிரியங்கா, ராஜு, பாவ்னி, வருண், அக்ஷரா, தாமரை செல்வி, சிபி, நிரூப், சஞ்ஜீவ் மற்றும் அமீர் ஆகிய 10 போட்டியாளர்கள் உள்ளனர்.
பிக்பாஸ் வீட்டில் தற்போது குடும்பத்தினர் வருகை புரிந்த வண்ணம் உள்ளனர். பல வாரங்கள் கழித்து தங்கள் குடும்பத்தினரை சந்திக்கும் போட்டியாளர்கள் மிகுந்த உணர்ச்சி வசப்படுகின்றனர்.
இன்றைய எபிசோடில், சஞ்ஜீவின் மனைவி மற்றும் குழந்தைகள் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்தனர்.

குடும்பத்தினர்
பிக் பாஸ் வீட்டிற்கு போட்டியாளர்களின் குடும்பத்தினர் வருகை புரிந்த வண்ணம் உள்ளனர். பல வாரங்கள் கழித்து தங்கள் குடும்பத்தினரை சந்திக்கும் போட்டியாளர்கள் மிகுந்த உணர்ச்சி வசப்படுகின்றனர். இதில் போட்டியாளர்களின் குடும்பத்தினர் ஒருவர் ஒருவராக உள்ளே வந்த வண்ணம் உள்ளனர்.

கண்ணீர் வழிய
இன்று பிக் பாஸ் வீட்டிற்குள் சஞ்ஜீவின் குடும்பத்தினர் வந்திருக்கிறார்கள். அவரது மனைவி சீரியல் நடிகை ப்ரீத்தி, மகள் மற்றும் மகன் என மொத்த குடும்பமும் வந்திருக்கிறது. ஆராரோ ஆரிரோ பாடல் கேட்டதுமே சஞ்ஜீவ் கண்களில் கண்ணீர் வழிய ஆரம்பித்துவிட்டது. அதன் பின் அவர் குழந்தைகளை கட்டியணைத்துக்கொண்டார்.

ஆசை
தன் மகளை கட்டி அணைத்து முத்தமிட்டு இப்போது மகிழ்ச்சியா? உள்ளே வர வேண்டும் என நீ தான் ஆசைபட்டாயே" என மகளை பார்த்து கேட்கிறார் சஞ்ஜீவ். மகளது இந்த ஆசையை நிறைவேற்றிய பெரு சஞ்சீவ் பிக் பாஸ் வீட்டுக்குள் வைல்டு கார்டு என்ட்ரியாக வந்தாரோ? என ரசிகர்கள் கேட்டுள்ளனர்.
Recommended Video

மனைவி
மனைவியை கட்டிஅணைத்து முத்தமிட்டு கண்ணீர் சிந்திய சஞ்ஜீவுக்கு ஆறுதல் கூறினார். இந்த வீட்டில் யாரும் உன்னை இதுவரை நாமினேட் நாமினேட் செய்யவில்லை. அனைவரும் அன்பாக இருக்கிறார்கள் குறிப்பாக ராஜூ உன் மீது ரொம்ப அன்பு வைத்துள்ளார் என்றார். சூப்பரா நேர்மையா விளையாடுற, நீ விளையாடுவதை பார்த்து அப்படியே ஒரு மாதிரி கூஸ்பம்ஸ் ஆயிடுச்சு என்று கணவரை புகழ்ந்து பேசிய ப்ரீத்தி ஜெயிக்க வாழ்த்துக்களை கூறினார்.


Click it and Unblock the Notifications











