நீ ஒரு செல்பிஷ்… இனி விலகியே இருப்போம்.. அமீரிடம் வருத்தப்பட்ட பாவனி !
சென்னை : பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் காதல் காவியம் பாடி வந்த பாவனி அமீர் ஜோடி இடையே தற்போது மனக்கசப்பு ஏற்பட்டுள்ளது.
பிக் பாஸ் வீட்டில் எத்தனை போட்டியாளர்கள் இருந்தாலும் பிக் பாஸ் எடிட்டரின் போக்கஸ் பாவனி அமீர் மீது மட்டுமே உள்ளது.
ஆனால், கடந்த சில நாட்களாக அந்த ஜோடி புற சோககீதம் படி வருகிறது.

அமீர்
பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் வைல்டு கார்டு என்ட்ரி மூலம் உள்ளே வந்த அமீர், வந்த நாளில் இருந்தே பாவனியின் பின்னால் சுற்றிக்கொண்டு காதல் கீதம் பாடிவந்தார். அபிநய், பாவனியின் காதல் குறித்து சர்ச்சை எழுந்த போது பாவனியிடம் இருந்து சற்று விலகி இருந்த அமீர். குறும்பட விவகாரத்திற்கு பிறகு மீண்டும் காதல் கீதம் பாட ஆரம்பித்தார்.

முத்த விவகாரம்
அபிநய் காதல் விவகாரத்தால் மன உளைச்சலில் இருந்த பாவனிக்கு ஆறுதல் கூறுவது போல சென்று அவருக்கு முத்தம் கொடுத்து பெரும் சர்ச்சையில் சிக்கினார். இதனால் இணையத்தில் பட்டிமன்றம் வைத்து விவாதிக்கும் அளவுக்கு பேசு பொருளாகவே இருவரும் இருந்தனர்.

கமல் மறைமுக தாக்கு
குடும்பங்களின் சந்திப்பு நடைபெற்ற போது, வந்த அனைவருமே காதல் விவகாரம் குறித்தும் பேசினர். பிக் பாஸ் வீட்டிற்குள் வந்த சஞ்ஜீவின் மனைவி கூட அமீர் அம்மாவுக்காக பிக் பாஸ்வீட்டிற்குள் வந்தீர்கள்...உங்க அம்மாவுக்காக விளையாடுங்கள் என்று கூறி விட்டு சென்றார். அதேபோல கமலும், உங்களின் கவனம் விளையாட்டில் இல்லை என்று மறைமுகமாக அமீருக்கு அறிவுரை கூறினார்.

அமீரின் புது கதை
இதையடுத்து, திடீரென ஞானோதயம் பிறந்தது போல, திங்கட்கிழமை நடந்த ஓபன் டாஸ்கில் பாவனியின் பெயரை நாமினேட் செய்து அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்தார் அமீர். நான் இந்த வீட்டில் விளையாடுவதற்காக வந்தேன் கேம் வேறு... பாவனி மீது நான் வைத்து இருக்கும் அன்பு வேறு என்று ஒரு புது கதையை கூறினார்.

நீ ஒரு செல்பிஷ்
இதையடுத்து, இன்றைய எபிசோடில் அமீர் பாவனியிடம் நாமினேஷன் செய்ததற்கு சாரி என்று கூறினார். இதற்கு பாவனி உன்னை என்னால் புரிந்து கொள்ளமுடியவில்லை. நான் வந்து உன்னை தொல்லை பன்னி இருந்தா நீ என் பெயரை நாமினேட் செய்து இருக்கலாம். நீ ஒரு செல்பிஷ் போல நடந்து கொண்ட என்று கூறினார்.
Recommended Video

பேச வேண்டாம்
இல்ல பாவனி,எல்லாரும் உன்மேல மட்டும் தான், என் கவனம் இருக்கும் என்று சொல்றாங்க அதற்காகத்தான் உன்னை நாமினேட் செய்தேன் என்றார். நான் செல்பிஷ் மாதிரி நடந்து கொண்டேன் என்றார் அமீர். இதையடுத்து பேசிய பாவனி, அப்போ இனிமேல் பேசிக்க வேண்டாம் தூரமாகவே விலகியே இருப்போம் என்று வருத்தத்துடன் கூறினார் பாவனி.


Click it and Unblock the Notifications











