ஆதரவு இல்லாமல் அனாதையா இருக்கேன்… ராஜூவிடம் ஆதங்கப்பட்ட தாமரை !
சென்னை : பிக் பாஸ் வீட்டின் பேசு பொருளாக தாமரை தொடர்ந்து நீடிக்கிறார்.
பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கிய நாளில் இருந்து, இப்போதுவரை இப்படியொரு பரிணாமம் நிகழும் என்பது யாருக்கும் தோன்றியிருக்காது.
வெட்டு ஒன்று துண்டு ரெண்டுனு தாமரை பேசுவதுதான் அனைவருக்கும் இவரை பிடித்து போக ஒரு முக்கிய காரணம் என்று சொல்லலாம்.

வம்புக்கு வந்த அமீர்
பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் டிக்கெட் டு ஃபினாலே டாஸ்கில் நேற்று தள்ளு முள்ளு அடிதடியே நடைபெற்றது. தாமரையை முதலில் வம்புக்கு இழுந்த அமீர் அவரின் கூடையிலிருந்த முட்டைகளை உடைத்தார். அமீரின் டார்கெட் தாமரை என்பது வெளிப்படையாகத் தெரிந்தது. ஆனால், இதற்கு எதிர்ப்பே தெரிவிக்காமல் சில முட்டைகளை உடைக்க தாமரை அவரை அனுமதித்தார்.

தள்ளுமுள்ளு
அமீரும் பிரியங்காவும் கூட்டு சேர்ந்து கொண்டுதான் தன்னுடைய முட்டைகளை உடைத்தார்கள் என்பதால், கடுப்பான தாமரை, பிரியங்காவை நோக்கி பாய்ந்தார். இருவருக்குள்ளும் தள்ளுமுள்ளு ஏற்பட்டு பிரியங்காவின் முட்டைகளை தாமரை உடைத்தார். தாமரையின் அனைத்து முட்டைகளும் உடைந்தால் அந்தபோட்டியிலிருந்து வெளியேறினார் தாமரை.

தனியாக விளையாடினார்
வருண், அக்ஷரா சென்றுவிட்ட பிறகு தாமரை தற்போது தனியாகவே இருக்கிறார். அவர் இப்போது ராஜூவிடமிருந்து விலகி நிரூப்பிடம் இணைந்திருக்கிறார். இதனால், நேற்றைய போட்டியில் கூட தாமரைக்கு யாருமே துணை இல்லாமல் தனியாகவே விளையாடினார்.
Recommended Video

வருத்தப்பட்ட தாமரை
இதையடுத்து,நேற்று தாமரைய சமாதானப்படுத்த வந்த ராஜூவை பார்த்து, யாரும் எனக்கு துணைக்கு வரல,வருண், அக்ஷரா போன பிறகு இந்த வீட்டில் நான் அனாதையாக இருக்கிறேன் என ராஜூவிடம் ஆதங்கப்பட்டுக் கொண்டார். நான் உதவி செய்ததே இல்லையா என ராஜு கேட்க, முட்டை டாஸ்கில் எனக்கு யாரும் துணைக்கு வரவில்லை. இனி நான் யாரையும் எதிர்பார்க்க மாட்டேன்...எதிர்பார்த்தது, என் தவறு என்று வருத்தத்துடன் கூறினார் தாமரை.


Click it and Unblock the Notifications











