நீ பண்றதெல்லாம் பாத்தா.. அடிக்கணும் போல இருக்கு… தாமரைக்கு ரைடுவிட்ட ராஜு!

சென்னை : பிக் பாஸ் வீட்டில் இந்த வாரம் டிக்கெட் டு ஃபினாலே ஜெயிப்பதற்கான டாஸ்குகள் கொடுக்கப்பட்டு இருக்கிறது அதில் நிரூப், பாவனி, தாமரை, ராஜு மற்றும் பிரியங்கா ஆகியோர் வெளியேறி உள்ளனர்.

அதன் பிறகு அமீர், சிபி மற்றும் சஞ்சீவ் ஆகியோர் மட்டுமே போட்டியில் இருக்கின்றனர்.

அவர்கள் மூன்று பேர் பங்கேற்கும் கடைசி டாஸ்க் இன்று நடந்து வருகிறது. இதில், இன்றைய எபிசோடில் ராஜூ தாமரைக்கு சிலஅறிவுரைகளை கூறினார்.

பிக் பாஸ்

பிக் பாஸ்

பிக் பாஸ் வீடு பல பிரச்சினைகளை கடந்து தற்போது இறுதிகட்டத்தை எட்டி உள்ளது. இதில் டிக்கெட் டு ஃபினாலே டாஸ்கின் முதல் போட்டியிலேயே நிரூப் வெளியேற்றப்பட்டார். இதையடுத்து, நடந்த முட்டை டாஸ்கில் அமீர் தாமரையின் முட்டைகளை ஒட்டுமொத்தமாக உடைத்துவிட்டார்.

புலம்பிய தாமரை

புலம்பிய தாமரை

பிரியங்காவுடன் கூட்டு சேர்ந்து கொண்டு அமீர் முட்டையை உடைத்ததால் கடுப்பான தாமரை பிரியங்காவுடன் மல்லுக்கட்டினார். இறுதியில் இருவருக்கும் அடிதடி தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இந்தசண்டையை அடுத்து தாமரை ஒருவிதமான மன கலக்கத்துடனே இருந்தார். தனக்கு யாரும் உதவ முன்வரவில்லை என்று தனியாக அழுது புலம்பினார்.

ஏன் இப்படி பண்ற

ஏன் இப்படி பண்ற

வருண், அக்ஷரா சென்று விட்ட பிறகு தாமரை தற்போது தனியாகவே இருக்கிறார். இதனால், தாமரையை அழைத்துப்பேசிய, ராஜூ அவருக்கு சில அறிவுரைகளை கூறினார். நீ தனியா போய் உங்காருவது, தனியா அழுவதை பார்ப்பதற்கு கஷ்டமா இருக்கு என்றார் ராஜூ. வருண் , அக்ஷரா இல்லாததால் அனாதையாக இந்த வீட்டில் இருக்கேன்னு சொல்லியது குறித்து, தாமரைக்கு சரியான ரைடுவிட்டார்.

Recommended Video

Bigg Boss Season 5 Ticket To Finale WINNER | First FINALIST | Ameer, Ciby
அடிக்கணும் போல கோவம் வருது

அடிக்கணும் போல கோவம் வருது

இந்த வீட்டில் இருக்கும் சிலருக்கு உன்னை பிடிக்கும், அதுக்காக உன் கிட்ட வந்து பிடிக்கும் பிடிக்கும்னு சொல்லிட்டு இருக்க மாட்டாங்க, அனாதையாக இந்த வீட்டில் இருக்கேன்னு சொன்னதை கேட்கும் போது சப்புனு அடிக்கணும் போல கோவம் வருது எனக்கு மட்டும் இல்லை எல்லாருக்கும் கோவம் வரும். இதனால், வீட்டில் இருக்குற நாட்களில் ஜாலியாக இரு என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X