முதுகில் குத்த தெரியுமா?… நிரூப்பை ஜாடைமாடையாக பேசிய பிரியங்கா… அவ்வளவுதான் உங்க நட்பா?

சென்னை: பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான முதல் ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதில், வழக்கம் போல பிரியங்காத்தான் இடம் பிடித்துள்ளார்.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு தினமும் 3 ப்ரோமோக்கள் வெளியாகும், அந்த 3 ப்ரோமோவிலுமே பிரியங்கா இல்லாமல் இருக்கவே மாட்டார்.

வீட்டில் எத்தனை போட்டியாளர்கள் இருந்தாலும் அவர் தான் ஹைட்டாக இடம் பிடித்து இருப்பார்.

7 பேர் நாமினேஷன்

7 பேர் நாமினேஷன்

பிக் பாஸ் வீட்டில் தற்போது, சிபி, ராஜு, இமான் அண்ணாச்சி, வருண், நிரூப், அமீர், சஞ்சீவ், அபினய், பாவ்னி, பிரியங்கா, அக்ஷரா, தாமரை என 12 போட்டியாளர்கள் உள்ளனர். இவர்களில் தாமரை, சிபி, அபினய், நிரூப், அக்ஷ்ரா, அமீர், இமான் ஆகியோர் இந்தவார நாமினேஷன் லிஸ்டில் உள்ளனர். இவர்களில் அபினய் அல்லது நிரூப் இந்த வாரம் வெளியேற வாய்ப்புகள் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அரசியல் கட்சி

அரசியல் கட்சி

இந்த வார லக்ஸரி பட்ஜெட்டிற்காக போட்டியாளர்கள் மூன்று அரசியல் கட்சிகளாக பிரிந்துள்ளனர். ஒவ்வொரு கட்சியும் தங்களுக்கு என தனிச் சின்னம், தனிக் கொடி மற்றும் கொள்கைகளை கொண்டுள்ளனர். இதற்காக கார்டன் ஏரியாவில் நடைபெற்ற டாஸ்கில், ஒவ்வொரு கட்சியில் இருந்தும் தலா ஒருவர் என மூன்று போட்டியாளர்கள் பங்கேற்க வேண்டும்.

வெற்றி பெற்றனர்

வெற்றி பெற்றனர்

முதல் பஸருக்கு போட்டியாளர்கள் தயாராக இருக்க வேண்டும். இரண்டாவது பஸருக்கு கொடி கம்பத்தில் தங்களின் கொடியை நடும் போட்டியாளர்களுக்கு தலா ஒரு மதிப்பெண் வழங்கப்படும்.மொத்தம் 6 ரவுண்டுகளாக போட்டி நடைபெற்றப்பட்டது. இதில் ராஜுவின் கட்சியும், சஞ்சீவின் என்பிபி கட்சியும் தலா 6 மதிப்பெண்களை பெற்று வெற்றி பெற்றனர்.

முதுகில் குத்த தெரியுமா

முதுகில் குத்த தெரியுமா

இந்நிலையில், எபிசோடுக்கான முதல் ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதில், பிரியங்கா தனது அணிக்காக பாட்டுப்பாடி பிரச்சாரம் செய்கிறார். அப்போது நிரூப் என பாட்டுப்பாடத்தெரியாதே என்று கூறுகிறார். உடனே இதற்கு பிரியங்கா உனக்கு முதுகில் குத்தத்தான் தெரியும் என்று கூறுகிறார்.

எரிச்சலான சிபி

எரிச்சலான சிபி

இதையடுத்து, சமையல் அறையில் நின்று கொண்டு நிரூப் மற்றும் சிபி சாப்பிட்டுக்கொண்டு இருக்கிறார்கள். அப்போது அங்கு வரும் பிரியங்கா எல்லாருக்கும் சாப்பாடு இருக்கானு பார்த்துட்டு சாப்பிடுங்க, சாப்பாடு, ஊறுகாய் என எதை சாப்பிட்டாலும் அனைவருக்கும் இருக்கானு பார்த்துட்டு சாப்பிடுங்க என்று கூறியுள்ளார். பிரியங்காவின் பேச்சால் எரிச்சலான சிபி, பிரியங்கா இப்படி பேசுவதால்தான் கோவம் வருகிறது. எதிரியாக இருந்தாலும் சாப்பிடும் போது இப்படி பேசக்கூடாது என கூறுவது போல ப்ரோமோவில் வெளியாகி உள்ளது.

கவலைப்படாத பிரியங்கா

கவலைப்படாத பிரியங்கா

நட்பு நட்புனு சொல்லிட்டு பிரியங்கா தற்போது ஜாடைமாடையாக நிரூப்பை பேசுவது என்ன நியாயம் என்று நெட்டிசன்ஸ் கேட்டு வருகின்றனர். என்னத்தான் விஜய் டிவியின் செல்லப்பிள்ளையாக இருந்தாலும், பிரியங்கா ரொம்ப ஓவராத்தான் போகிறார் நாளுக்கு நாள் பிரியங்காவின் நன்மதிப்பு குறைந்து கொண்டே வருகிறது.இதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் பிரியங்கா, நான் இப்படித்தான் என்பது போல நடந்துக்கொண்டு இருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X