நாட்டுப்புற பாடகி சின்ன பொண்ணு… பிக் பாஸ் சீசனின் 9வது போட்டியாளர்!
சென்னை : பிக் பாஸ் சீசன் 9வது போட்டியாளராக நாட்டுப்புற பாடகி சின்ன பொண்ணுவை பிக் பாஸின் நாயகன் கமல்ஹாசன் அறிமுகம் செய்து வைத்தார்.
அவர் பாடி பட்டி தொட்டி எங்கும் பட்டையை கிளப்பிய நாக்கு முக்கா பாடலை பாடி அனைவரிடத்திலும் கைத்தட்டலை பெற்றார்.
நாட்டுப்புற இசைக்கலைஞரான சின்னப்பொண்ணு 9வது போட்டியாளராக பிக் பாஸ் இல்லத்திற்குள் நுழைந்துள்ளார்.

சின்ன பொண்ணு
நாட்டுப்புற இசைக்கலைஞரான சின்ன பொண்ணு, சிவகங்கை மாவட்டத்தில் பிறந்தவர். தனது 13வது வயதில் கோயில்களிலும் தேவாலயங்களிலும் தன்னுடைய தனித்துவமான குரலால் மக்களின் மனங்களை வென்றார்.பல மேடை நிகழ்ச்சிகளிலும் ,கோவில் திருவிழாக்களிலும் சின்ன பொண்ணுவின் பாடலே ஒலித்தது.

வாழ்த்துறேன் வாழ்த்துறேன்
2004 ஆம் ஆண்டில் ராஜினிகாந்த் நடித்த சந்திரமுகி படத்தில் இவர் பாடிய வாழ்த்துறேன் வாழ்த்துறேன் என்ற பாடல் பட்டி தொட்டி எங்கும் ஒலித்து இவரின் குரலை நாடு அறிய செய்தது. இதையடுத்து,காதலில் விழுந்தேன் படத்தில் இவர் பாடிய நாக்கு முக்கா அனைவரையும் ஆட்டம் போடவைத்தது.

9வது போட்டியாளர்
நாட்டுப்புறப்பாடகி சின்ன பொண்ணுவை பிக்பாஸ் இல்லத்தில் 9வது போட்டியாளராக அறிமுகம் செய்து வைத்தார் கமல் ஹாசன். தான் பாடி பட்டி தொட்டி எங்கும் ஹிட்டடித்த காதலில் விழுந்தேன் திரைப்படத்தின் பாடலை பாடி பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்தார்.

மக்களை மகிழ்விக்க
பிக் பாஸ் மேடையில் அவரை வரவேற்ற கமல், இவர் நாட்டுப்புற பாடகி மட்டும் இல்லாமல் பல கலைஞர்களையும் உருவாக்கி வருகிறார் என்று கூறினார். அப்போது பேசிய சின்ன பொண்ணு கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனாவால் மக்களுக்கு எந்த கலைகளும் சென்று சேரவில்லை. இந்த பிக் நிகழ்ச்சி மூலமாக மக்களை மகிழ்விக்க, பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதாகவும், முக்கியமாக நாட்டுப்புற கலையை வளர்க்க வந்துள்ளதாக கூறினார். மேலும், இயக்குனர் ராசி மணிவாசகம் கமலை பற்றி எழுதிய பாடலை பாடினார். பிக் பாஸ் இல்லத்திற்குள் நுழைந்த அவர் இல்லத்தில் இருந்த போட்டியாளர்கள் உற்சாகமாக வரவேற்றனர்.


Click it and Unblock the Notifications











