இந்த சீசனிலும் ஒரு இலங்கை தமிழ் பெண்... பிக் பாஸின் 3வது போட்டியாளர் ' ஜெர்மன் மாடல்' மதுமிதா!
சென்னை: பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் மூன்றாவது போட்டியாளராக ஜெர்மனியை சேர்ந்த மதுமிதா பங்கேற்றுள்ளார்.
பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி இன்று தொடங்கியுள்ள நிலையில் இதுவரை இரண்டு போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டுக்குள் சென்றுள்ளனர்.
முதல் போட்டியாளராக கானா பாடகி இசைவானி பிக்பாஸ் வீட்டுக்குள் சென்றார். இரண்டாவது போட்டியாளராக நடிகர் ராஜு பிக்பாஸ் வீட்டுக்குள் சென்றார்.

ஜெர்மனியில் இருந்து மதுமிதா
பிக்பாஸின் மூன்றாவது போட்டியாளராக ஜெர்மனியை சேர்ந்த மதுமிதா பங்கேற்றுள்ளார். இலங்கை தமிழ் பெண்ணான மதுமிதா, பிறந்து வளர்ந்ததெல்லாம் ஜெர்மனியில்தான்.

ஜெர்மனி மாடல்
ஜெர்மனியில் ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் மதுமிதாவுக்கு சினிமாவில் நடிக்க வேண்டும் என்பது நீண்ட கால ஆசையாம். மாடலாகவும் பணி புரிந்து வருகிறார். மேலும் ஃபேஷன் டிசைனராகவும் உள்ளார் மதுமிதா.

இலங்கை தமிழ்
மதுமிதா பிக்பாஸ் வீட்டின் மூன்றாவது போட்டியாளர் உள்ளே நுழைந்துள்ளார். கடந்த மூன்றாவது சீசனில் தர்ஷன் மற்றும் லாஸ்லியா ஆகியோர் இலங்கை தமிழ் போட்டியாளர்களாக பங்கேற்றனர்.

கழுத்தில் கட்டும் டை
இந்நிலையில் இம்முறை மதுமிதா ஜெர்மனியில் இருந்து பங்கேற்றுள்ளார். நடிகர் கமல்ஹாசனுக்கு தானே டிசைன் செய்த கழுத்தில் கட்டும் டையை பரிசாக கொடுத்தார் மதுமிதா.


Click it and Unblock the Notifications











