இந்த வாரம் வெளியேறப்போவது யாரு? பாவனியை டார்கெட் செய்யும் ஹவுஸ்மேட்ஸ்!
சென்னை : பிக் பாஸ் சீசன்5 நிகழ்ச்சி முடிய இன்னும் 4 வாரங்களே எஞ்சி உள்ளதால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் சுவாரசியம் கூடி உள்ளது.
யார் டைட்டில் வின்னர் ஆவார்... யார் ரன்னர் அப் ஆவார் என்பதை தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
தற்போது பிக் பிக் பாஸ் வீட்டில், ராஜூ, சஞ்சீவ்,சிபி, நிரூப் , அமீர், வருண், தாமரை, பாவனி, பிரியங்கா, அக்ஷரா என 10 பேர் மட்டுமே உள்ளனர்.

அபிநய் வெளியேற்றம்
பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து நேற்று அபிநய் வெளியேற்றப்பட்டார். முதல் வாரத்தில் இருந்து நாமினேஷனில் பெயர் வந்தும் கடைசி நேரத்தில் காப்பாற்றப்பட்ட அபிநய் இறுதியாக நேற்று வெளியேற்றப்பட்டது சற்று வருத்தமாகவே உள்ளது. இதனால் போட்டியாளர்களிடையேயும் ஒருவிதமான பயம் ஏற்பட்டுள்ளது என்பதை உணர முடிகிறது.

3வது ப்ரோமோ
இதையடுத்து, இன்றைய எபிசோடுக்கான 3வது ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதில், திங்கட்கிழமை என்பதால் நாமினேஷன் நடக்கிறது. இந்த வார வெளியேற்றப் பட்டியலில் பலரும் அமீர் மற்றும் பாவனியை நாமினேட் செய்துள்ளனர்.

காதல் விவகாரம்
பாவனி அபிநய் காதல் விவகாரத்தை ராஜூ கேட்டார் என்பதற்காக, நீ யாரு... நீ என்ன என் அண்ணனா... தம்பியா... என்னை பற்றி பேச நீ யாருனு காட்டுத்தனமாக பேசி பாவனி, அமீர் எல்லைமீறி முத்தம் கொடுக்கும் அளவுக்கு போன பிறகும், டேய் என்னடா... ஏன்டானு அமீரை கொஞ்சி வருவது பார்வையாளர்களை சற்று முகம் சுளிக்க வைத்துள்ளது.

பாவனி தான் டார்கெட்
பார்வையாளர்களே கடுப்பாகும் போது உள்ளேயே இருக்கும் ஹவுஸ்மேட்டுகள் நிச்சயம் அவர் இருவரின் மீதும் வெறுப்பாகத்தான் இருப்பார்கள். இதனால், இந்த வாரம் பாவனியை வெளியேற்றிவிட வேண்டும் என்று டார்கெட் வைத்து பாவனியின் பெயரை ஹவுஸ்மேட்டுகள் நாமினேட் செய்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











