பிக்பாஸ் வீட்டுக்குள் 12வது போட்டியாளராக நுழைந்த பிரபல நடிகர்... யாருன்னு பாருங்க!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் 12 போட்டியாளராக பிரபல நடிகரான இமான் அண்ணாச்சி வீட்டுக்குள் என்ட்ரி கொடுத்துள்ளார்.
விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி இன்று முதல் தொடங்கியுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் இதுவரை 11 போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டுக்குள் சென்றுள்ளனர்.

இமான் அண்ணாச்சி
12 வது போட்டியாளர்களாக நடிகர் இமான் அண்ணாச்சி பிக்பாஸ் வீட்டுக்குள் சென்றுள்ளார். இமான் அண்ணாச்சி தொலைக்காட்சி சேனல்களில் தொகுப்பாளராக கேரியரை தொடங்கினார்.

தமிழ் சினிமாவில் என்ட்ரி
பல்வேறு தொலைக்காட்சி சேனல்களில் தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார் இமான் அண்ணாச்சி. சென்னை காதல், படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார் இமான் அண்ணாச்சி.

சூர்யாவுடன் சிங்கம் 3
தொடர்ந்து தலைநகரம், வேல், வேட்டைக்காரன், அங்காடித்தெரு, பாணா காத்தாடி, கோ, நீர்ப்பறவை, பாகன், மரியான், நைய்யாண்டி, ஜில்லா, கோலி சோடா, மெட்ராஸ், பூஜை, கயல், காக்கி சட்டை, காவல், சிங்கம் 3, களவானி 2, ஜாக்பாட் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

பிக்பாஸ் வீட்டுக்குள் என்ட்ரி
கடைசியாக சேஸிங் என்ற படத்தில் நடித்தார் இமான் அண்ணாச்சி. இமான் அண்ணாச்சி தூத்துக்குடி மாவட்டம் எரல் பகுதியை பூர்விகமாக கொண்டவர். தற்போது பிக்பாஸ் வீட்டுக்குள் என்ட்ரி கொடுத்துள்ளார் இமான் அண்ணாச்சி. வீட்டுக்குள் செல்லும் முன்பாக மேடையில் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் கமலை வரவேற்றார் இமான் அண்ணாச்சி.


Click it and Unblock the Notifications











