நிரூப் கொடுத்த காஸ்ட்லி கிப்ட்... கண்கலங்கிய பிரியங்கா… என்ன பரிசுனு தெரியுமா ?
சென்னை : பிக் பாஸ் வீட்டில் எந்த டாஸ்க் வந்தாலும் நிரூப்,பிரியங்கா இருவரும் ஒருவரை ஒருவர் பயங்கரமாக திட்டிக்கொள்வார்கள்.
தற்போது பிக் பாஸ் வீட்டில் நாட்கள் நெருங்க நெருங்க இருவரும் பாச மழை பொழிந்து வருகிறார்கள்.
இதய நோயால் அவதிப்படும் 5 மாத குழந்தை உயிர் பிழைக்க உதவுங்கள் ப்ளீஸ்
நேற்றைய எபிசோடில் காஸ்ட்லியான கிப்டை பிரியங்காவுக்கு கொடுத்து அவரை ஆனந்த கண்ணீர் சிந்தவைத்துவிட்டார் நிரூப்.

அன்பு டீம்
பிக் பாஸ் சீசன் 5 தொடங்கியதும், அபிஷேக், பிரியங்கா, நிரூப் 3 பேரும் மினி அன்பு கூட்டணியை தொடங்கி வீட்டில் தனியாக செயல்பட்டு வந்தனர். பஞ்சதந்திர டாஸ்கில் இவர்கள் அன்பு கூட்டணியின் ஆட்டம் அதிகமாகவே இருந்தது.

முறிந்தது
நாணய டாஸ்கில் பிரியங்காவின் காயினை நிரூப் எடுத்துக்கொண்டதை அடுத்து நிரூப் பிரியங்கான இருவரும் அவ்வப்போது சண்டை போட்டுக்கொண்டனர். அபிஷேக் வெளியேறியதை அடுத்து இவர்களின் அன்பு கூட்டணி முறிந்தது.

மோசமான சண்டை
எந்த டாஸ்க் வந்தாலும் இவர்கள் இருவருக்கும் இடையே சண்டை உச்சத்தில் இருக்கும். கயிறு டாஸ்கின் போது கூட நிரூப்பை சீண்டி அவரை போட்டியிலிருந்து வெளியேற வைத்ததே பிரியங்கா தான். அப்போது நடந்த சண்டையில் கூட நிரூப், உனக்கு பிடிக்கவில்லை என்றால் அவர்களை குழித்தோண்டி புதைச்சிடுவே என்று பிரியங்காவைப்பார்த்து கூறியிருந்தார் நிரூப். இதை கமல் கண்டித்ததை அடுத்து அவரின் முன்னிலையிலே பிரியங்காவிடம் மன்னிப்பு கேட்டார்.
Recommended Video

அன்பு பரிசு
வீட்டில் நீங்கள் விரும்பும் நபருக்கு அன்பு பரிசளிக்க வேண்டும் என்று பிக் பாஸ் கூறினார். இதையடுத்து, நிரூப் பிரியங்காவுக்கு அன்பு பரிசு ஒன்றை அளித்தார். அதை திறந்து பார்த்த பிரியங்கா கண்கலங்கினார். அப்போது பேசிய நிரூப், என் அம்மா எனக்கு கொடுத்தது, இதை என்னைவிட நீ பத்திரா வைச்சிப்பே என்பதால், நான் இதை உனக்கு கொடுக்கிறேன் என்று கையில் அணிந்திருந்த தங்க ப்ரேஸ்லட் பரிசாக அளித்தார். இதை சற்றும் எதிர்பாராதா பிரியங்கா கண் கலங்கி நிரூப்பை கட்டி அணைத்துக் கொண்டார்.


Click it and Unblock the Notifications











