Don't Miss!
- Finance
பிடன் அரசுக்கு காத்திருக்கும் சவால்கள்.. எப்படி எதிர்கொள்ளப் போகிறது அமெரிக்கா?
- News
400அடி பள்ளம்.. 8நாள் போராட்டம் -நெல்லை கல்குவாரி விபத்தில் சிக்கிய 6வது நபர் மீட்பு - நடந்தது என்ன?
- Sports
உப்புக்கு சப்பு இல்லாத போட்டி..? யார் சொன்னது ? கடைசி ஐபிஎல் லீக் போட்டியின் சம்பவங்கள்
- Automobiles
டொயோட்டா ஃபார்ச்சூனர் என்ன ஆகப்போகுதோ? ஜீப் மெரிடியன் காரின் டெலிவரி பணிகள் விரைவில் தொடக்கம்!
- Technology
லுக் வேற லெவல்: புதிய எமரால்டு பிரவுன் வண்ண விருப்பத்தில் சாம்சங் கேலக்ஸி எம்33, எம்53 5ஜி!
- Lifestyle
வார ராசிபலன் 22.05.2022-28.05.2022 - இந்த வாரம் இந்த ராசிக்காரங்களாம் ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணும்...
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
பிக் பாஸ் வீட்டிற்குள் வந்த விஜய் டிவி பிரபலங்கள்.. மனதை கவர்ந்த ராஜு பாய்.. களைகட்டிய நிகழ்ச்சி!
சென்னை : பிக் பாஸ் நிகழ்ச்சியின் 5வது சீசன் முடிய இன்னும் சில நாட்களில் நிறைவடைய இருக்கிறது.
வைல்டு கார்டு என்ட்ரியாக வந்த அமீர் முதல் ஃபைனலிஸ்ட்டாகவும், நிரூப் இரண்டாவது ஃபைனலிஸ்டாகவும் தேர்வானார்கள். தாமரை வெளியேறியதை அடுத்து ராஜு , பிரியங்கா, பாவனி ஃபைனலிஸ்டில் இடம்பிடித்துள்ளார்.
பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி 18 போட்டியாளர்களுடன் தொடங்கி தற்போது இறுதிகட்டத்தை எட்டி உள்ளது. டைட்டில் வின்னராக யார் வரப்போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களின் ஹாட்பீட்டை அதிகரித்துள்ளது.

சுவாரசியம்
பிக் பாஸ் நிகழ்ச்சி இறுதிவாரத்தில் இருப்பதால், எந்தவித டாஸ்கும் இல்லாம் போட்டியாளர்கள் வெட்டியாக பொழுதை கழித்துவருகின்றனர். இதனால், நிகழ்ச்சியின் சுவாரசியத்தை கூட்ட வீட்டிலிருநது வெளியேறிய போட்டியாளர்கள் மீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் வந்த வண்ணம் இருக்கிறார்கள்.

மீண்டும் தாமரை
நேற்றைய எபிசோடில், நாடியா, சுருதி, அபிநய் மற்றும் சிபி ஆகியோர் வீட்டுக்குள் மீண்டும் வந்திருந்தனர். இறுதி நாமினேஷனில் வெளியேறிய தாமரை மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்தார். அதேபோல டபிள் எவிக்ஷனாகி வெளியேறிய வருண் மற்றும் அக்ஷரா ஒன்றாக பிக்பாஸ் வீட்டிற்குள் வந்தனர்.

விஜய் டிவி பிரபலங்கள்
ஈரமான ரோஜாவே சீஸன் 2 மற்றும் செந்தூரப்பூவே சீசன் 2 சீரியல்களின் குழுவினர் பிக் பாஸ் வீட்டுக்குள் இன்று விருந்தினர்களாக வந்தார்கள். இதில் ஈரமான ரோஜாவே சீரியல் இரவு 10 மணிக்கும், செந்தூரப்பூவே சீரியல் இரவு 10.30 மணிக்கும் வரும் திங்கள் முதல் விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது. இந்த இரு சீரியலின் ப்ரோமோவும் போட்டியாளர்களுக்கு போட்டு காட்டப்பட்டது.

மனம் கவர்ந்த ராஜூபாய்
இதையடுத்து, மனம் கவர்ந்த போட்டியாளருக்கு ரோஜா கொடுக்கும் டாஸ்கில் அதிக ரோஜாக்களை ராஜு பெற்றார். பிரியங்காவுக்கு உடல்நிலை சரியில்லாததால் அவரின் ரோஜாக்களையும் ராஜு கையில் வைத்திருந்தார். போட்டியாளர்களின் மனதை மட்டுமல்ல, ரசிகர்களின் மனதையும் ராஜூ பாய் வென்றுவிட்டார் என்று அவரின் தீவிர ரசிகர்கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.