பிரியங்காவை அவாய்ட் பண்ண தாமரை... மொத்த பிக் பாஸ் எபிசோடையும் பார்த்து இருப்பாரோ?

சென்னை : விஜய் டிவியில் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி இந்த வாரத்தோடு முடிவடைகிறது. டைட்டில் வின்னரைக்கான பிக் பாஸ் ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்தில் உள்ளனர்.

கடந்த நான்கு சீசன்களைப்போலவே இந்த சீசனும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப்பெற்றது.

இறுதிப்போட்டியாளர்களாக நிரூப், பாவனி, பிரியங்கா, அமீர் மற்றும் ராஜு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

பிக் பாஸ்

பிக் பாஸ்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் கடைசி வாரம் என்பதால் இதற்கு முன்பு பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய போட்டியாளர்கள் விருந்தாளிகளாக பிக்பாஸ் வீட்டுக்குள் வந்த வண்ணம் உள்ளனர். அதன்படி, நேற்று பிக்பாஸ் வீட்டுக்குள் ஸ்ருதி, நாடியா சாங், அபிநய், சிபி உள்ளே வந்தனர்.

தாமரை என்ட்ரி

தாமரை என்ட்ரி

மைக்கை பிடித்துக்கொண்டு பாட்டை பாடிக்கொண்ட மாஸ் என்ட்ரி கொடுத்தார் தாமரைச்செல்வி. அவரை போட்டியாளர்கள் கட்டி அணைத்து வரவேற்றனர். தாமரை வீட்டிற்குள் வந்ததும் பிரியங்கா, வெளியில் எல்லாரும் என்ன பேசுறாங்கனு கேட்டார்... எனக்குத்தான் நீங்க ஒரு பெயரை வெச்சி இருக்கீங்களே தெரியாது... தெரியாதுனு உண்மையில் எனக்கு எதுவுமே தெரியாது என்று கூறிவிட்டு சிரித்துக்கொண்டே அங்கிருந்து சென்றுவிட்டார்.

தாமரை மாறிட்டா

தாமரை மாறிட்டா

பிரியங்காவிடம் என்னத்தான் சண்டை போட்டாலும் அவரிடம் அன்பாக மணிக்கணக்கில் பேசும் தாமரை, அவரை அவாய்ட் செய்துவிட்டு ராஜு, நிரூப்புடனே மணிக்கணக்கில் பேசினார். தாமரையின் மாற்றத்தை கண்டுபிடித்த பிரியங்கா இது தாமரையே இல்ல... இவ இப்படி அமைதியா பேசவே மாட்டா... இவ வெளியில போய் நிகழ்ச்சி பார்த்து இருக்கா அதான் மாறிடா என்று வருத்தப்பட்டு புலம்பினார்.

Recommended Video

Bigg Boss வீட்டில் Thamarai Selvi வாங்கிய சம்பளம்?? | Bigg Boss பண பேட்டி
ரசிகர்கள் அதிர்ச்சி

ரசிகர்கள் அதிர்ச்சி

தாமரை எப்போதும் மனதில் இருப்பதை பேசக்கூடியவர், அவரின் எதார்த்தமும், வெகுளித்தனமும் தான் மக்களை கவர்ந்து. இத்தனை நாள் அவர் வீட்டில் இருக்க முக்கிய காரணமாகும். பைனல் டப் 5ல் தாமரை வருவார் என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில் திடீரென வெளியேறி அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X