பிக் பாஸ் வீட்டிலிருந்து அதிரடியாக வெளியேறிய சஞ்ஜீவ்… போகிற போக்கில் பாவனிக்கு அட்வைஸ்!
சென்னை : பிக் பாஸ் தமிழ் சீசன் 5 நிறைவு பெற இன்னும் இரண்டு வாரங்களே உள்ள நிலையில், சஞ்வீவ் குறைந்த வாக்குகள் பெற்று பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறினார்.
பதினெட்டுப் போட்டியாளர்களுடன் தொடங்கியது நிகழ்ச்சியில், வைல்டு கார்டு என்ட்ரி மூலம் நடிகர் சஞ்சீவ், டான்சர் அமீர் இருவரும் உள்ளே நுழைந்தார்கள்.
இதில், 5 கட்டமாக நடந்த டிக்கெட் டூ ஃபினாலே டாஸ்கில், இறுதி வரை சிறப்பாக விளையாடி அனைத்து டாஸ்குகளையும் முடித்து பைனலுக்கு முதல் ஆளாகத் தகுதி பெற்றார் அமீர்.

பிக் பாஸ் சீசன் 5
பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில், அதிக எண்ணிக்கையில் போட்டியாளர்கள் நிகழ்ச்சியிலிருந்த நிலையில், கடந்த வாரம் முதன் முதலாக இரட்டை எவிக்ஷன் நடந்து வருண், அக்ஷரா இருவரும் வெளியேறினர். முன்னதாக வெளியேறுவதற்கான நாமினேஷன் பட்டியலில் நிரூப், தாமரை, பிரியங்கா, சஞ்சீவ், அமீர், ராஜு, சிபி, பாவனி என நிகழ்ச்சியில் இருக்கும் அனைவருமே இருந்தனர்.

பிரியங்கா சேவ்
நேற்றைய எபிசோடில் ராஜூ சேவ் என்று கமல் அறிவித்தார் ராஜுக்கு மக்களின் ஆதரவு அதிகமாகவே உள்ளது. பெரும்பாலும் அவரின் பெயர் நாமினேஷனில் வராது அப்படி வந்தாலும் அவரே முதல் ஆளாக காப்பாற்றப்படுவார். ராஜூவைத் தொடர்ந்து பிரியங்கா காப்பாற்றப்படுவதாக கமல் அறிவித்தார். இதையடுத்து நிரூப்,பாவனி,தாமரை காப்பாற்றப்பட்டனர்.

சஞ்ஜீவ் வெளியேறினார்
சஞ்ஜீவ் மற்றும் சிபி இருவர் மட்டுமே எஞ்சி இருந்தனர். இதில் சஞ்ஜீவ், இந்த வாரம் பிக் பாஸ் வீட்டிலிருந்து எலிமினேட் ஆகி உள்ளார். யாரும் எதிர்பாராத நிலையில், சஞ்சீவ் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். தளபதி விஜய்யின் நண்பரான இவருக்கு விஜய்யின் ரசிகர்களின் வோட்டு நிச்சயம் இருக்கும், இவர் நிச்சயம் பைனல் வரை செல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறி அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளார்.
Recommended Video

பாவனிக்கு அட்வைஸ்
இதையடுத்து,பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறி சஞ்ஜீவ், நான் திரையில் பல ஆண்டுகளாக இருக்கிறேன் மக்கள் என்னை நடிக்க அழைத்ததாக இதை எடுத்துக் கொள்கிறேன் என்றார். மேலும், பாவனி இந்த வீட்டுக்கு வருவதற்கு முன்பு நிறைய பிரச்சினைகளை சந்தித்து உள்ளீர்கள். பிக் பாஸ் வீட்டில் பல பிரச்சனைகளை சந்தித்துள்ளீர்கள். ஆனால் பிரச்சினையிலிருந்து துவண்டு போகாமல் அதிலிருந்து மீண்டு வந்து இன்று இந்த இடத்தையில் இருப்பதாக கூறினார். நீங்கள் வீக்கான போட்டியாளர் இல்லை நீங்கள் முட்டை டாஸ்கில் சிறப்பாக விளையாடினீர்கள் நீங்கள் வெற்றி பெற வாழ்த்துக்கள் என்றார்.


Click it and Unblock the Notifications











