முட்டை டாஸ்க் பஞ்சாயத்து… மீண்டும் அதே கதை… கடுப்பான ஃபேன்ஸ் !
சென்னை : பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் இறுதி நாமினேஷன் வாரம் காரசாரமாக தொடங்கி உள்ளது.
அடுத்த வாரம் சீசனின் ஃபைனல்ஸ் என்பதாலும், இது தான் கடைசி நாமினேஷன் என்பதாலும், யாரெல்லாம் நாமினேட் ஆகிறார்கள் என்பதை காண ரசிகர்கள் ஆர்வமுடன் இருக்கின்றனர்.
டிக்கெட் டு ஃபினாலே போட்டியில் வெற்றி பெற்ற அமீரை இந்த வாரம் நாமினேஷன் செய்ய முடியாது.

ஓபன் நாமினேஷன்
பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் இன்றைய போட்டியாளர்கள் யாரை நாமினேட் செய்கிறார்களோ அவர்கள் கழுத்தில் மாலை அணிவித்து நாமினேட் செய்வதற்கான காரணத்தை கூற வேண்டும் என்று பிக் பாஸ் இந்த வாரம் ஓபன் நாமினேஷனை அறிவித்திருந்தார் இதில் நாமினேட் செய்பவருக்கு மாலை அணிவிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

அமீர் நாமினேட்
ராஜுவை நாமினேட் செய்த அமீர், டிக்கெட்டு ஃபினாலே டாஸ்கில் நீங்கள் விட்டு கொடுத்ததாக கூறியது எனக்கு பிடிக்கவில்லை என்று கூறி அவரை நாமினேட் செய்தார். அதேபோல, தாமரையை நாமினேட் செய்த அமீர், முட்டை டாஸ்கில் நீங்கள் ஏன் ராஜுவின் முட்டையை உடைக்கவில்லை என்று எடக்குமுடக்கான கேள்விகளை கேட்டார்.

மீண்டும் அதே கதை
நீங்கள் அனைவரும் என் முட்டையை உடைக்க பிளான் பண்ணீடீங்க, அதனால் என் மைண்டு அந்த பக்கம் போகவில்லை என்று கூறினார் தாமரை. இந்த பதில் எனக்கு திருப்தியாக இல்லை, நாங்க அனைவரும் பிளான்பண்ணித்தான் விளையாடி உங்கள் முட்டையை உடைத்தோம். ஆனால், நீங்க தனியாகத்தானே விளையாட்டீங்க, அப்போ நீங்க ராஜூவின் முட்டையை உடைச்சி இருக்கலாமே என்று மீண்டும் மீண்டும் அந்த முட்டை கதையையே பேசி பேசிக்கொண்டு இருந்தார் அமீர்.
Recommended Video

கடுப்பான ஃபேன்ஸ்
நேற்றும் இதே முட்டை பஞ்சாயத்துதான், இன்னைக்கும் இதே பஞ்சாயத்தா வேற டாப்பிங்கே இல்லையா... இதே கதையை எத்தனை நாளைக்கு பேசவீங்க என்று ரசிகர்கள் கருத்துக்கூறி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











