உன்னை நம்பவே பயமா இருக்கு… பாவனி பற்றி மோசமான கருத்தை கூறிய ராஜு!
சென்னை : பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஐந்தாவது சீசன் தற்போது முடிவடையும் தருணத்தில் கடைசி கட்டத்தில் நெருங்கி விட்டதால் இந்த சீசனில் யார் வெற்றி பெறுவார்கள். யார் இரண்டாவது வருவார்கள் என்று ரசிகர்கள் எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு வருகிறது.
இந்த சீசனில் எந்த சீசனிலும் இல்லாத வகையில் இவர் தான் வெற்றி பெறுவார் என்று யாரையும் குறிப்பிட்டு சொல்ல முடியாத வகையில் தான் ஒவ்வொரு நாளும் விளையாட்டு போய்க்கொண்டிருக்கிறது.
இன்று திங்கட்கிழமை என்பதால் நாமினேஷன் ப்ராசஸ் தொடங்கியது. கடந்த வாரம் போலவே இந்த வாரமும் ஓபன் நாமினேஷன் நடைபெற்றது.

அமீர்
வைல்டு கார்டு மூலம் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்த அமீர், டிக்கெட்டு ஃபினாலே டாஸ்கில் வெற்றி பெற்று நேரடியாக பைனலுக்கு தகுதி பெற்றார். 5 கட்டமாக நடந்த அந்த டாஸ்கில் கடுமையாக போராடி வெற்றி பெற்றார் அமீர்.

ஓபன் நாமினேஷன்
இதையடுத்து, பிக் பாஸ் வீட்டில் இன்று ஓபன் நாமினேஷன் நடைபெற்றது. இதில், ராஜுவை நாமினேட் செய்த பாவனி , இந்த வீட்டிற்கு வந்த நாளிலிருந்தே என்னை டார்கெட் செய்வதே உங்கள் வேலை, நான் உங்களிடம் பழகலாம் என்று வந்தால் கூட நீங்க என்னிடம் பழகாமல் விலகி இருந்தீர்கள் இதுதான் நான் உங்களை நாமினேட் செய்ய காரணம் என்றார்.

நீ நம்பத்தகுந்த ஆள் கிடையாது,
இதற்கு பதிலளித்த ராஜு, காலையில ஒரு மாதிரி பேசுவ, நைட் ஒரு மாதிரி பேசுவ உன்கிட்ட இருக்கும் ஒரு பழக்கம் அது. எனக்கு உன்னை நம்பவே பயம், நீ ஒரு நம்பத்தகுந்த ஆள் கிடையாது, அதனால் உன்கிட்ட நெருங்கி வர எனக்கு பிடிக்கவில்லை என்றார். மேலும், நீ சிரிச்சிட்டு பக்கத்தில் வந்தாலே, வா அருகில் வா பொம்மை மாதிரி எனக்கு பீல் ஆகும் அதனாலே நான் உன்கிட்ட நெருங்கி வரமாட்டேன் என்று அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை பாவனி மீது வைத்தார் ராஜு.
Recommended Video

அபி நய்
அபிநய் மற்றும் பாவனியும் பிக்பாஸ் வீட்டில் நெருங்கி பழகுவதை பார்த்த ராஜு, ட்ரூத் ஆர் டேர் கேமில், அபிநய்யிடம் நீங்க பாவனிய லவ் பண்றீங்களா? என நேரடியாகவே கேட்டார். ராஜுவிடம் இருந்து இந்த கேள்வியை சற்றும் எதிர்பாராத அபிநய், என்ன சொல்வது என்று தெரியாமல் சற்று திகைத்துப் போனார். இதையடுத்து இந்த விஷயம் பூதாகரமானது. காதல் விவகாரத்தில் மவுனம் காத்து வந்த கமல் குறும்படம் போட்டு சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார். அப்போதிலிருந்தே பாவனி மற்றும் ராஜுக்கும் இடை ஒரு வித மன கசப்பு நிலவி வருகிறது.


Click it and Unblock the Notifications











