தவறு செய்தவனை விட.. தவறு செய்ய தூண்டியவன் தான் கெட்டவன்.. தாமரை சொன்ன பஞ்ச் !
சென்னை : பிக் பாஸ் வீட்டில் வெட்டு ஒண்டு துண்டு ரெண்டு என பேசி அனைவரின் மனதிலும் இடம் பிடித்துள்ளார் தாமரைச்செல்வி.
கிராமத்திலிருந்து வந்து பிக் பாஸ் வீட்டில் அனைவரையும் வாய் பிளக்க வைத்துள்ளார் தாமரை, பல நேரம் நியாயத்தை பேசும் தாமரை, அதை கோபத்துடனே கத்தி பேசுவதால் அது எடுபடாமல் போய்விடுகிறது.
பிக் பாஸ் போட்டி குறித்து எதுவுமே தெரியாமல் 92 நாட்களை அழகாக கடந்து வந்துள்ளார் தாமரைச் செல்வி.

முட்டை டாஸ்க்
முட்டை டாஸ்கில் அமீர், தாமரையிடம் இருக்கும் முட்டைகளையும், ராஜு மற்றும் சிபி ஆகியோர் பாவனியிடம் இருக்கும் முட்டைகளையும் உடைக்க முயற்சி செய்தனர். ஆனால் பிரியங்கா, அமீர் மற்றும் சஞ்சீவ்வை தன்னுடன் சேர்த்துக் கொண்டு விளையாடினார்.

வேடிக்கை பார்த்தனர்
சஞ்சீவ் மற்றும் அமீருடன் சேர்ந்து கொண்டு பிரியங்கா விளையாடுவதை பார்த்த தாமரை, பிரியங்காவிடம் வாக்குவாதம் செய்தார். பிறகு அது அடிதடி சண்டை அளவிற்கு பிரச்சனை பெரிதானது. இவர்களின் சண்டையை போட்டியாளர்கள் தடுக்காமல் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தனர்.

கண்டித்த கமல்
இந்த விவகாரம் குறித்து பிரச்சனை எழுப்பிய கமல், விளையாட்டில் அடித்து தள்ளிவிடுவது என்பது விதிமீறல்கள் என கூறி தாமரையை கண்டித்தார். அதேபோல, தாமரையை பார்த்து பிரியங்கா தூ என துப்பியது மிகவும் கண்டிக்கத்தக்கது என பிரியங்காவையும் கடுமையாக சாடினார்.

கோபம் அதிகமானது
இந்நிலையில், பிக் பாஸ் வீட்டில் கடைசி நாமினேஷன் நடைபெற்றது இதில், பிரியங்காவை நாமினேட் செய்த தாமரை, அதற்கான காரணத்தை கூறினார். முட்டை டாஸ்கில் முதலில் என்னை வம்புக்கு இழுத்ததே நீ தான் , இதனால் தான் எனக்கு கோவமும் ஆத்திரமும் அதிகமாகவே ஆனது. ஆனாலும் மீண்டும் மீண்டும் என் கோவத்தை தூண்டுவிட்டுக்கிட்டேஇருந்தது நீ தான் என்றார்.
Recommended Video

அனைவரும் நாமினேட்
தவறு செய்தவனை விட தவறு செய்ய தூண்டியவன் தான் கெட்டவன் என்று சினிமா பாணியில் பஞ்ச் வசனம் பேசி பிரியங்காவை இந்த வாரம் நாமினேஷன் செய்கிறேன் என்றார் தாமரை. அமீரைத் தவிர இந்த வாரம் அனைவரும் நாமினேட் செய்யப்பட்டதாக பிக் பாஸ் அறிவித்தார்.


Click it and Unblock the Notifications











